அதிக பென்ஷன் வேண்டுமா?
EPS என்ற ஓய்வூதிய திட்டத்தில் அதிக பென்ஷன் தொகை பெறுவது தொடர்பாக EPFO தற்போது புதிய விதிகளை வகுத்திருக்கிறது. ஜாயின்ட் ரெக்வஸ்ட் என்ற கூட்டு கோரிக்கை இல்லாதோர் என்ன செய்ய வேண்டும் என்றும் அதற்கான ஆவணங்கள் என்னென்ன தேவை என்றும் EPFO தெரிவித்துள்ளது. கள அதிகாரிகள் என்னெவல்லாம் செய்யவேண்டும் என்றபட்டியில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
*நிறுவனங்கள் வழங்கும் தொகை அல்லது நவம்பர் 16,1995இதில் எதுஉகந்ததோ அதை பரிசீலிக்க வேண்டும்.
*ஓய்வூதியம் பெறும் நபருக்கு தரவேண்டிய நிர்வாகத் தொகையை நிறுவனமே தரவேண்டும்.
*தொழிலாளரின் வைப்பு கணக்கு அதாவது EPFஇன் கணக்கு விவரங்களை 1952 பர் பேரா 60 விதிப்படி சேர்க்க வேண்டும்.
கீழ்கண்ட ஏதேனும் ஆவணங்களை கள அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*எவ்வளவு சம்பளம் என்ற விவரத்தை தரும் பணியாளரின் கூட்டு விவரங்களை சரிபார்க்கவேண்டும்.
*சம்பளம் அளித்ததற்கான சான்று அதாவது பேஸ்லிப்.
*கூட்டு கோரிக்கை மற்றும் அதை பெற்றுக்கொண்ட நிறுவனத்தின் கடிதம் தேவை.
*4-11-2022க்கு முன்பு வருங்கால வைப்பு நிதி அலுவலகம் அளித்த கடிதம் தேவை.
கூட்டு கோரிக்கை தராத பணியாளர் மீண்டும் வேறு வகையில் அதனை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்தே இந்த சுற்றறிக்கையை EPFO நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதிக பென்ஷனை EPS முறையில் பெறுவதற்கு வரும் ஜூன் 26ஆம் தேதியே கடைசி நாளாகும்
அதிக பென்ஷனுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட உடன் வட்டார பி.எப்ஆணையர் அந்த கோரிக்கையை கையாள்வார்.எந்த இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்ற URLவிரைவில் கிடைக்கும் வகையில் ஆணையர் பணிகளை தொடங்குவார்.
*ஒவ்வொரு படிவமும் டிஜிட்டலில் பதிவேற்றப்படும்.அதற்கென பிரத்யேக ரிசிப்ட் எண்களும் வழங்கப்படும்.
*இந்த விண்ணப்பங்கள் தொழிலாளர் பணி செய்த நிறுவனத்துக்கும் செல்லும்,அவர்களுக்கு பிரத்யேக லாகின் பாஸ்வேர்டு வழங்கப்படும்.
*பிரத்யேக டீலிங் அஸிஸ்ட்டன்ட் இதற்கான காகித பணிகளை செய்வார்.
*குறிப்பிட்ட தேதிக்கு பிறகு வந்துள்ளதா என்றும் சரிபார்க்கப்படும்.
*தகுதியான எஸ் எஸ் அல்லது ஏஓ பரிசோதித்த பிறகு இதனை பரிசீலனைக்கு அனுப்புவார்.
*அனைத்து பணிகளும் முடிந்த பிறகு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் குறுஞ்செய்தி வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும்.
வாரா வாரம் எவ்வளவு பேரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன என்ற அறிக்கை அந்தந்த மண்டலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்