MG பங்குகளை வாங்க துடிக்கும் சஜ்ஜன் ஜிண்டால்?
பிரபல தொழிலதிபராக இருப்பவர் சஜ்ஜன் ஜிண்டால். இவர் நடத்தி வரும் நிறுவனம் ஒன்று பிரபல MG நிறுவன பங்குகளில் 48 விழுக்காடு பங்குகளை வாங்க முயற்சி நடப்பதாக சந்தையில் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷாங்காயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் MG motorsநிறுவனத்தின் இவ்வளவு பெரிய பங்குகளை வாங்குவதன் மூலம் அதனை இந்திய நிறுவனமாக மாற்றும் முயற்சியில் சஜ்ஜன் ஜிண்டால் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தனை பெரிய டீல் நடக்க இருக்கும் சூழலில் jsw ஸ்டீல் மற்றும் jsw energy ஆகிய நிறுவனங்கள் இதில் தலையிடவே இல்லை, இந்திய அரசு விதிப்படி 51 விழுக்காடு பங்குகள் வைத்திருக்கும் நிறுவனத்துக்கே உரிமை செல்லும் என்பதால் எப்படியாகவது இதனை சாத்தியப்படுத்த சஜ்ஜன் திட்டமிட்டு வருகிறார் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள் ஜிண்டாலும் அவரின் மகன் பார்த் ஆகியோரும் அண்மையில் சீனா சென்று வந்தது இந்த புகைச்சலை அதிகப்படுத்தியுள்ளது. எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் உரிமை 12,300 கோடி ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இன்னும் 3-4 மாதங்களில் சட்டரீதியிலான பணிகள் முடியும் என்றும் தகவல் கிடைத்திருக்கிறது இந்த நிறுவனம் பிரிட்டனில் இருந்து சீனாவுக்கு மாறியுள்ள நிலையில் இந்தியாவில் எம்ஜி நிறுவன கார்கள் குறைவாகவே விற்கப்பட்டு வருகிறது.இதுவரை அந்த நிறுவனத்தின் 1லட்சத்து 46 ஆயிரம் கார்கள் மட்டும்தான் இந்தியாவில் விற்கப்பட்டுள்ளன. அடுத்த 3-4 ஆண்டுகளுக்குள் இந்தியாவில் 5ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளை அந்த நிறுவனம் செய்ய திட்டமிட்டுள்ளது. 2026-28ஆம் ஆண்டுகளுக்குள் எம்ஜி நிறுவனம் 4 அல்லது 5 புதிய கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.இவை அனைத்தும் மின்சார கார்களாக இருக்கவும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் இந்த நிறுவனத்தின் கார்கள் குஜராத்தில்தான் உற்பத்தியாகின்றன.