ஏற்றுமதியை கவனியுங்கள்!!!
எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளை ஆங்கிலத்தில் ஓபெக் நாடுகள் என்று அழைக்கின்றனர். இந்த நாடுகள் தங்கள் விருப்பம்போல எண்ணெய் உற்பத்தியை ஏற்றவும், இறக்கவும் செய்கின்றன. இந்த நிலையில் ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல நிறுவனத்தின் அதிகாரி இகோர் செசின், ஓபெக் நாடுகளின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் தாங்கள் உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெயில் 90 விழுக்காடு வெளிநாடுகளுக்குத்தான் ஏற்றுமதி செய்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ள செச்சின், உண்மையில் ரஷ்யாவின் ஏற்றுமதி என்பது உற்பத்தியில் 50 விழுக்காடு மட்டுமே என்று கூறியுள்ளார். ஒபெக் நாடுகளைப் போல ரஷ்ய கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்களும் திடீரென உற்பத்தி குறைப்பை செய்ய இருக்கின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒபெக் நாடுகளில் முதல் நாடாக உற்பத்தி குறைப்பை இந்தாண்டில் அறிவித்தது ரஷ்யா மட்டுமே. ஏற்றுமதிதான் பிரச்னைகள் ஏற்பட காரணமாக கூறப்படும் நிலையில் அதைத்தான் முதலில் கவணிக்க வேண்மே தவிர இறுதி முடிவுகளை கவனிக்க கூடாது என்றார். சவுதி அரேபியாவும் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்துள்ள நிலையில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.