வணிக பற்றாக்குறை தொடர்ந்து அதிகரிப்பு…
இந்தியாவில் பொருட்கள் வணிகம் ஆகும் அளவு என்பது கடந்த ஏப்ரல் மாதத்தில் 15.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது தற்போது 22.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மே மாதம் அதிகரித்துள்ளது. மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு பொருட்கள் ஏற்றுமதி செய்யும் அளவு என்பது கடந்த மே மாதத்தில் மட்டும் 10.2 விழுக்காடு உயர்ந்து 35 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இதேபோல் பொருட்கள் இறக்குமதி செய்யப்படும் பற்றாக்குறையானது அளவு 9.7% உயர்ந்து ஆண்டுக்கு ஆண்டு 57.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்திருக்கிறது. மாதாமாதம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அளவுகள் என்பது குறைந்திருக்கிறது. மே மாதத்தில் மட்டும் ஏற்றுமதி வெறும் 0.9%, இறக்குமதி என்பது 14.4% உயர்ந்திருக்கிறது. பொறியியல் துறை ஏற்றுமதி என்பது 9.3 பில்லியன் குறைந்து ஆண்டுக்கு ஆண்டு 4.2 விழுக்காடாக வீழ்ந்துள்ளது. பெட்ரோலிய பொருட்களின் ஏற்றுமதியோ கடந்தாண்டைவிட 29.9 விழுக்காடு குறைந்து 5.9பில்லியன் டாலராகவும் சரிந்துள்ளது. ஆபரணக்கற்கள்,மற்றும் நகைகள் 12.5 விழுக்காடு குறைந்து 2.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக சரிந்தது. ரசாயனங்கள் ஏற்றுமதி 12.7 விழுக்காடு குறைந்தது.இதேபோல் மருந்துகள் ஏற்றுமதி 0.1 விழுக்காடு குறைந்து 2.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்தது. பல்வேறு நாடுகளில் இருந்து இந்த பொருட்கள் தேவை குறைந்துள்ளதால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி சரிந்ததாக கூறப்படுகிறது. இந்தியாவின் நிலைமை ஆண்டின் இரண்டாவது பாதியில் சீரடைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. பெட்ரோலியம் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதியும் 6 விழுக்காடு குறைந்து 15.6 விழுக்காடாக குறைந்தது.நிலக்கரி இறக்குமதி 28.5விழுக்காடு குறைந்து 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்தது. மின்சாதன பொருட்களின் இறக்குமதியோ 18.6% அதிகரித்துள்ளது. மின்சாதன பொருட்கள் இறக்குமதி 25.4%உயர்ந்து 4.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.கடந்தாண்டைவிட 38.7 % தங்கம் இறக்குமதி குறைந்தது.