ஜீ குறித்து செபி கூறிய பரபரப்பு தகவல்!!!
இந்திய ஊடகங்களில் ஜீ நிறுவனத்துக்கு எப்போதும் தனித்துவமான இடம் உள்ளது. இந்த நிலையில் பொதுமக்களின் ஏராளமான பணத்தை ஜீ நிறுவனத்தின் புரோமோட்டர்கள் சட்டவிதிகளை மீறி எடுத்து தனியார் நிறுவனங்களுக்கு பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நிறுவன பாதுகாப்பு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயமான SATஅமைப்பில் முறையிட்டது. இது தொடர்பான விசாரணையில், செபி விளக்கமளிக்க கோரப்பட்டு இருந்தது. இந்த விசாரணையில் செபி அண்மையில் சரமாரியான புகார்களை தெரிவித்துள்ளது. அதில் ஜி நிறுவனத்தின் புரோமோட்டர்கள் சட்டவிரோதமாக பணியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது என்று செபி கூறியுள்ளது. விதிகளை மீறி செயல்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை உடனடியாக எடுக்கவும் செபி பரிந்துரைத்துள்ளது. இதனிடையே சோனி நிறுவனம் மற்றும் ஜீ நிறுவனம் இணைப்பு தொடர்பாக வரும் 26ஆம் தேதி தேசிய நிறுவனங்களின் சட்ட தீர்ப்பாயம் விசாரணை நடத்த இருக்கிறது.