இந்த மாதம் 30 கடைசி..!!!!
நிந்தர கணக்கு எண் மற்றும் ஆதார் எண்களை இணைக்க இந்த மாத 30கடைசி தேதியோகும். அந்த தேதிக்கு பிறகு பரிவர்த்தனை நடந்தால் அது அபராதத்தை ஏற்படுத்தும். எனவே இந்த தேதிக்குள் பணிகளை செய்யும்படி வருமான வரி நிறுவனம் கேட்டுக்கொண்டு உள்ளது. WWW.incometax.gov.in என்ற இணைய முகவரியில் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் – பான் எண்ணை இணைக்க 1000 ரூபாய் பணம் கட்ட வேண்டும்.
எப்படி இணைப்பது ?
1)www.incometax.gov.in என்ற இணையத்தில் ஆதார் பான் இணைப்பு என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
2)பான் மற்றும் ஆதார் எண்களை உள்ளீட்டு செய்யவும்.
3)பணத்தை செலுத்த வேண்டும்.
4)otp எண் உங்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு வரும்
5)otp பதிவு செய்தது வருமான வரி செலுத்தும் பக்கம் செல்லும்
அதன் பிறகு தேவையான அம்சங்களை செய்ய வேண்டும்.
ஒரு வேளை நீங்கள் ஆதார் – பான் எண் இணைக்காவிட்டால் உங்கள் பான் எண் செயலிழந்து விடும். பின்னர் அதற்கு அபராதமாக வருமான வரியில் பெறப்படும் எந்த சலுகையும் உங்களால் பெற இயலாது.