விமானத்தை போல டீலும் பெருசு..
இந்தியாவில் இண்டிகோ நிறுவனம் விமான போக்குவரத்தில் மிக முக்கிய நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனத்தின் விரிவாக்க பணிகள் நடக்கின்றன. இதன் ஒரு பகுதியாக A320 பேமலி ரக விமானங்கள் 500 வாங்க ஏர்பஸ் நிறுவனத்துடன் இண்டிகோ நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு முன்பு ஏர் இந்தியா நிறுவனம் ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவன விமானங்கள் 470 வாங்க இருந்ததே பெரிய டீலாக இருந்தது. தற்போது ஏர்பஸ் நிறுவனத்திடம் இண்டிகோ மட்டும் 500 விமானங்கள் ஆர்டர் தந்து இருப்பது மிகப்பெரிய அம்சமாக மாறியுள்ளது. A320,A321 என இரண்டு வகை இஞ்சின்கள் கலந்து வாங்க ஒப்பந்தம் நடந்துள்ளது. இந்த ஒப்பந்தம் பாரிஸ் நகரில் நேற்று நடந்த விமான கண்காட்சியில் கையெழுத்து ஆகியுள்ளது. இந்த விமானங்கள் வரும் 2030-35 காலகட்டத்தில் கிடைக்கும் என கூறப்படுகிறது. கரியமில வாயு அதிகம் வெளியேறுவதை தடுக்க புதிய இன்ஜின்கள் உதவ இருக்கின்றன. பல ஆண்டு பந்தம் இந்த இரு நிறுவனங்களுக்கும் இடையே உள்ளது. இந்தியாவில் உள்ள உள் நாடு மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் நிறுவனங்கள் சேவை வழகும் நிறுவனங்கள் இப்படி சேவைகளை அதிகரிப்பதால் மாசு ஏற்படலாம்.