சரிந்து முடிந்த சந்தைகள்!!
இந்திய பங்குச்சந்தைகள் ஜூன் 22ஆம் தேதி சரிவில் முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 284 புள்ளிகள் சரிந்து 63 ஆயிரத்து 238 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 86 புள்ளிகள் சரிந்து, 18 ஆயிரத்து 771 புள்ளிகளகாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. வர்த்தகம் தொடங்கியதும் சரிந்த சந்தைகள், இரண்டாவது பாதியில் பெரிதாக வீழ்ந்தன. அனைத்துத்துறை பங்குகளையும் விற்பதிலேயே முதலீட்டாளர்கள் குறியாக இருந்தனர். Tata Steel, Bajaj Finance, Tata Consumer Products, Tata Motors உள்ளிட்ட நிறுவன பங்குகள் தேசிய பங்குச்சந்தையில் சரிந்தன.Divis Laboratories, L&T, HDFC, HDFC Bank ஆகிய நிறுவன பங்குகள் விலை உயர்ந்தன. பொதுத்துறை வங்கிகள்,ஆற்றல்துறை பங்குகள் சுமார் 1 விழுக்காடு சரிவை கண்டன.உலோகம்,மருந்து, தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் சுமார் அரை விழுக்காடு சரிந்தன. பங்குச்சந்தைகளைப்போலவே தங்கத்தின் விலையும் சரிந்தது. ஒரு சவரன் தங்கம் 44 ஆயிரம் ரூபாய்க்கு கீழே விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் 20 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 485 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 43 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் 50 காசுகள் சரிந்து 75 ரூபாயாக விற்பனையானது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு ஆயிரத்து 500 ரூபாய் குறைந்து 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. தங்கம் மற்றும் வெள்ளி விலையுடன் 3 விழுக்காடு ஜிஎஸ்டி என்பது கட்டாயம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் செய்கூலி,சேதாரம் கடைக்கு கடை மாறும் என்பதால் எங்கு குறைவாக கிடைக்குமோ அங்கேயே வாங்குவது புத்திசாலித்தனம் என்பதை நினைவில் கொள்ளவும்.