வாரன் பஃபெட் செய்த தானம்..!!!
உலகளவில் பலராலும் அரியப்படும் முதலீட்டு நிபுணராக வாரன் பஃபெட் இருக்கிறார். இவர் அண்மையில் தனது பெர்க்ஷைர் ஹாத்வே நிறுவனத்துக்கு சொந்தமான 13.69 மில்லியன் பங்குகளை 5 பெரிய நிறுவனங்களுக்கு தானமாக வழங்கியுள்ளார். அதில் குறிப்பாக மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு மட்டும் 10,453,008 பங்குகளை தானமாக அளித்தார். இதற்கு அடுத்தபடியாக, சூசன் தாம்ப்சன் அறக்கட்டளைக்கு 1,045,300 பங்குகளும், 7,31,708 பங்குகளாக ஷெர் உட் பவுண்டேஷன் அமைப்புக்கு அளித்துள்ளார். வாரன் பஃப்பெட்டின் பிள்ளைகள் நடத்தும் 3 நிறுவனங்களுக்கும் அவர் பணத்தை பிரித்து பங்குகளாக அளித்துள்ளார்.
4,74, 998 ஏ வகை பங்குகளின் 43 பில்லியன் டாலராகவும், இது வாரன் பஃபெட்டின் மொத்த சொத்தில் 98 சதவிதம் என்றும் வாரன் தெரிவித்துள்ளார். தன்னிடம் இருந்த 9,129 ஏ வகை பங்குகளை 1,36,93,500 B வகை பங்குகளாக வாரன் பஃப்பெட் மாற்றினார். இதில் 1,36,93,432 பங்குகளை அவர் தானமாக வழங்கியுள்ளார். தற்போதைய நிலையில், வாரன் பஃப்பெட்டிடம் பெர்க்ஷெயர் ஹேத்வே நிறுவனத்தின் 2,18,287 A வகை பங்குகளும், 344 B வகை பங்குகள் மட்டுமே எஞ்சியுள்ளன.