காப்பர் ஆலை விற்பனைக்கு வருகிறது…!!
பிரபல தொழிலதிபர் அனில் அகர்வால், வேதாந்தா குழுமத்தின் அதிபராக உள்ளார். இவர் தமிழ்நாட்டில் உள்ள தனது செம்பு உற்பத்தி ஆலையை விற்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 4,500 கோடி ரூபாய்க்கு இந்த ஆலையை விற்க அனில் அகர்வால் திட்டமிட்டுள்ளார். கடந்தாண்டு ஜூன் மாதமே இந்த ஆலையை விற்க முயற்சி நடந்தது. ஆனால் யாரும் இந்த ஆலையை வாங்க முன்வரவில்லை. 5 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் ஆலையை வாங்க யாரும் முன்வராத நிலையில்,அதனை விற்கும் முயற்சியில் மீண்டும் அந்நிறுவனம் வங்கி வாயிலாக ஈடுபட்டுள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நடவடிக்கையை அடுத்து இந்த நிறுவன ஆலை மூடப்பட்டுள்ளதுடன்,ஆலையை விற்க உச்சநீதிமன்றத்தை வேதாந்தா நிறுவனம் நாடியது.இது தொடர்பான உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது. வாங்கிய கடனை திருப்பி செலுத்தவும், 1.7 பில்லியன் அமெரிக்க டாலர் கடனை கட்டவும் வேதாந்தா இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஜூன் 22ஆம் தேதி நிலவரப்படி வேதாந்தா நிறுவன பங்குகள் 0.43 விழுக்காடு அதிகரித்து 282 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.