சரிந்து முடிந்த இந்திய சந்தைகள்..
வாரத்தின் கடைசி வர்த்தக நாளில் (ஜூன் 23), இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 260 புள்ளிகள் சரிந்து 62 ஆயிரத்து 979 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 106 புள்ளிகள் சரிந்து 18 ஆயிரத்து 665 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. Adani Enterprises, Adani Ports, BPCL, Hindalco Industries ஆகிய நிறுவனங்கள் பெரிய சரிவை சந்தித்தன. IndusInd Bank, Dr Reddy’s Laboratories, Bharti Airtel, Asian Paints ஆகிய பங்குகள் நல்ல லாபத்தை பதிவு செய்தன.
உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள் துறை பங்குகள் சரிந்தன. பொதுத்துறை வங்கிகள், தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகளும் 1 முதல் 2 விழுக்காடு வரை சரிந்தன. Larsen & Toubro, Arvind, Aurobindo Pharma, VA Tech Wabag, Texmaco Rail & Engineering, VST Tillers Tractors உள்ளிட்ட நிறுவனங்கள் 52 வாரங்களில் இல்லாத புதிய உச்சத்தை தொட்டன. பங்குச்சந்தைகள் ஒரு பக்கம் சரிந்தாலும் தங்கத்தின் விலையும் சரிந்து வர்த்தகம் நடந்தது. ஒரு கிராம் தங்கம் 40 ரூபாய் குறைந்து 5445 ரூபாயாக விற்பனையாகிறது. ஒரு சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 43 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 74 ரூபாய்க்கு வணிகமானது. கட்டி வெள்ளி விலைகிலோ 74 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இந்த விலைகளுடன் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி சேதாரம் சேர்க்க வேண்டும், செய்கூலி,சேதாரம் கடைக்கு கடை மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்