நாங்களும் விவசாயி தான்!!!
பிரபல நடிகர் ஷாருக்கான் இந்தியா மட்டுமின்றி உலகளவில் தெரிந்த நட்சத்திரமாவார். இவரின் மகள் சுஹானா கானும் திரைத்துறையில் உள்ளார். இவர் அண்மையில் தாம் ஒரு விவசாயி என்று தெரிவித்துள்ளார். மும்பை அருகே தால் என்ற கிராமத்தில் விவசாய நிலத்தை வாங்க ஆர்வம் காட்டி வருகிறார். 23 வயதாகும் ஷாருக்கானின் மகள் பெயரில், 12 கோடியே 91லட்சம் ரூபாயில் விவசாய நிலம் வாங்கப்பட்டுள்ளது. இந்த நிலம் வாங்கப்பட்டதற்காக பத்திர பதிவு கட்டணம் மட்டும் 77.46 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளது. ஷாருக்கானின் மனைவி கவுரி, சகோதரி சவிதா,நமிதா ஆகியோரும் தேஜாவு பார்ம்ஸ் என்ற நிறுவனத்தின் இயக்குநர்களாக இருக்கின்றனர். கடற்கரை ஓரமே பெரிய நட்சத்திர பங்களாவில் வசித்து வரும் ஷாருக் கான், மும்பையின் அலிபாக் பகுதியில் இருந்து வெறும் 12 நிமிட பயண தூரத்தில் இந்த விவசாய நிலம் வாங்கப்பட்டுள்ளது.
அண்மையில் தான் படம் ஒன்றில் நடிக்கத் தொடங்கிய சுஹானா, குறுகிய காலத்தில் இந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ளார். இளம் தலைமுறையினர் விவசாயம் பக்கம் திரும்ப வேண்டும் என்று பலரும் கூறி வரும் நிலையில் 12 கோடி ரூபாய்க்கு நிலம் வாங்கியுள்ள ஷாருக்கான் குடும்பத்தினர், பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்கின்றனர்.ஆனால் என்ன ஷாருக்கான் போல பல விவசாயிகளிடம் 12 கோடி ரூபாய் இருக்காது என்பதே நிதர்சனம்..காஸ்ட்லி விவசாயிதான்…