கோடிகளை கொட்டும் இந்துஜா குழுமம்:
இந்தியாவில் முக்கியமான வங்கி நிறுவனமாக திகழ்வது indusind வங்கி. இந்த நிறுவனத்தில் இந்துஜா குழுமத்தின் பங்கு 16% ஆக இருந்தது. இதனை 26% ஆக உயர்த்த இந்துஜா குழுமம் முயற்சி செய்தது. அதன் ஒரு பகுதியாக 10,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. கடந்த நவம்பர் 2021இல் ரிசர்வ் வங்கி வங்கிகள் முதலீட்டில் மாற்றம் கொண்டுவந்தது. இதற்கு பிறகு செய்யபப்டும் பெரிய முதலீடு இதுவாகும். மார்ச் மாதம் முடிந்த காலாண்டில் 2040 கோடி ரூபாய் லாபத்தை indusind வங்கி பதிவு செய்தது . இந்த நிலையில் குறிப்பிட்ட நிறுவனத்தில் இந்துஜா குழுமம் முதலீடு செய்வது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முயற்சி ஆக கருதப் படுகிறது.