டிசிஎஸ் நிறுவனம் மறுப்பு!!!
இந்தியாவில் பெரிய டெக் நிறுவனங்களில் முக்கியமானது டிசிஎஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தில் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 100 கோடி ரூபாய் அளவுக்கு வேலை வாங்கி தருவதாக புகார் எழுந்தது. Rmg பிரிவில் பணியாற்றிய சக்கரவர்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பணம் பெற்றதாக புகார்கள் எழுந்தன. இதற்கு மறுப்பு தெரிவித்த டிசிஎஸ் நிறுவனம் தங்கள் நிர்வாகிகள் குற்றத்தில் ஈடுபடவில்லை என்று கூறியுள்ளது. மேலும் அர் எம்ஜி பிரிவு ஆட்களை சேர்க்கும் பணியில் இல்லை என்றும், ஒப்பந்ததார் மூலமாகவே ஆட்சேர்ப்பு நடக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் முக்கிய நிர்வாகி யாரும் எந்த பணமும் பெறவில்லை என்று சொல்லி இருக்கிறது. 6 லட்சம் பேர் பணியாற்றும் நிறுவனத்தில் இப்படி ஒரு புகார் தங்கள் கவனத்துக்கு வந்ததால் புகாரும் அளிக்கப்பட்டு இருப்பதாக டிசிஎஸ் கூறியுள்ளது.