அதிகபட்ச பென்ஷன் திட்டத்துக்கு அவகாசம் நீட்டிக்க வாய்ப்பு..
உயர்ந்த அளவு பென்ஷன் பெறுவதற்கான கால வரம்பை மேலும் 3 மாதங்கள் ஈபிஎப்ஓ அமைப்பு நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதுள்ள நடைமுறையில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருப்பதாக பலரும் குற்றச்சாட்டு தெரிவித்து வரும் நிலையில் இதனை மேலும் 3 மாதங்கள் மத்திய அரசுநீட்டிக்கும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வளவு நிலுவைத் தொகை இருக்கிறது என்று கணக்கிடுவதில் கோளாறு இருப்பதாலும், குறுகிய அவகாசம் மட்டுமே இருப்பதாலும் இந்தநீட்டிப்புக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.மிகத்தெளிவாக கணக்கிட தெரிந்தவர்கள் மட்டுமே இந்த உயர்ந்த பென்ஷனுக்கு விண்ணப்பிக்கும் வகையில் இந்த திட்டம் இருப்பதாக பலரும் புலம்புகின்றனர்.உயர்ந்த அளவு பென்ஷனான ஈபிஎஸ் திட்டம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத சூழலும் நிலவுகிறது. ஆன்லைனில் இந்த விண்ணப்பத்தை செய்ய அவகாசம் இருந்தாலும்,குறுகிய கால வரம்பே இருக்கிறது. ஈபிஎப்ஓ போர்ட்டலில் அவ்வப்போது ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளும் இந்த பிரச்னையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. ஏற்கனவே இரண்டுமுறை விண்ணப்பிக்க கடைசி தேதி மாற்றி அமைக்கப்பட்டது. தற்போது உள்ள நடைமுறை மிகவும் சிக்கலானதாக இருக்கிறது. இதனை எளிமையாக்க வேண்டும் என்று மக்கள் ஏராளமானோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கைகளை ஏற்று வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நடவடிக்கைகள் எடுக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது