எச்டிஎப்சி -எச்டிஎப்சி வங்கி இணைப்பால் யாருக்கு லாபம்?
இந்தியாவின் பிரபல நிறுவனங்களான எச்டிஎப்சி-எச்டிஎப்சி வங்கி ஆகிய பெரிய நிறுவனங்கள் இதுவரை தனித்தனியே இயங்கி வந்தன. இவை வரும் 1ஆம் தேதிக்குள் இணைய இருப்பதாக அந்த நிறுவனங்களின் தலைவர் தீபக் பாரெக் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இப்போது வரை அதிக பணம் கடனாக தரும் வங்கியாக பாரத ஸ்டேட் வங்கி உள்ளது. எச்டிஎப்சி வங்கியும்,எச்டிஎப்சி நிறுவனமும் இணையும்பட்சத்தில் இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனமாக உருவெடுக்க இருக்கிறது. பிக்ஸ்டு டெபாசிட் எனப்படும் எப்டி கணக்கு வைத்திருப்போருக்கு இரு வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. ஒன்று பணத்தை திரும்பப்பெற வேண்டும் இல்லையெனில் எச்டிஎப்சி வங்கிக்கு எப்டியை மாற்றவேண்டும்.
12 முதல் 120 மாதங்கள் வரை டெபாசிட் செய்தோருக்கு எச்டிஎப்சி நிறுவனம் 6.56 விழுக்காடில் இருந்து 7.21 விழுக்காடாக வட்டி வழங்கி வந்தது. அண்மையில் எச்டிஎப்சி வங்கி 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையில் வட்டி 3 விழுக்காடு முதல் 7.25 விழுக்காடு வட்டி தருவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே டெபாசிட் செய்தவர்களுக்கு இந்த இரு நிறுவன இணைப்பு பாதகம் தான். இந்த இரு நிறுவனங்களின் இணைப்பு மூலம் எப்டி பணம் 5 வட்சம் வரை போட்டிருந்தவர்களுக்கு கூடுதல் காப்பீடு கிடைக்கும். ஏற்கனவே எச்டிஎப்சியில் வீட்டுக்கடன் வாங்கியிருந்தவர்களுக்கு எந்த வித பெரிய பாதிப்பும் இருக்காது. இதுவரை எச்டிஎப்சி நிறுவனம் துவக்க வட்டியாக 8.5 விழுக்காடு வீட்டுக்கடன் வழங்கி வந்தது. ஏற்கனவே எச்டிஎப்சி பரஸ்பர நிதி வைத்திருந்தோர் 10 விழுக்காடு கூட்டு பாதுகாப்புத் தொகைக்கு மேல் வைத்திருக்க முடியாது என்பது செபியின் விதி, எனவே ஏற்கனவே பரஸ்பர நிதி வைத்திருந்தோர் தங்கள் முதலீட்டை மாற்றி அமைக்கவும் அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இனி எச்டிஎப்சி நிறுவனத்தில் கணக்கு வைத்திருந்தோரும் எச்டிஎப்சி வங்கியில் எளிதில் கிரடிட் கார்டு கடன்களை எளிதில் வாங்கிக்கொள்ள இயலும்.