10 ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்சம்:
ரிசர்வ் வங்கி தனது நிதி சமநிலை அறிக்கையை வெளியட்டது . அதில் வாராக் கடன் அளவு கடந்த மார்ச் மாத கணக்குப்படி 10 ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவாக 3.9% ஆக பதிவாகியுள்ளது . Net non performing assets எனப்படும் nnpa அளவு 1.0% ஆக குறைந்து உள்ளது. வாரா கடன் அளவு 10 ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவாக இருந்தாலும். சர்வதேச அளவில் நிலவும் சிக்கல்களை சமாளிக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி அறிக்கை கூறுகிறது. 2024ஆம் ஆண்டு மொத்த வாராக்க்கடன் 3.6% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்திய வங்கி கட்டமைப்பு எவ்வாறு உள்ளது என்பதை ஆறு மாதத்துக்கு ஒரு முறை எடுத்துக்காட்டும் வகையில் நிதி சமநிலை அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. வங்கி துறையில் தனிநபர் கடனில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக கூறியுள்ள ரிசர்வ் வங்கி, நிதி சார்ந்த துணை பிரிவுகளும் முன்னேற்றம் கண்டு வருகிறது என்று கூறப்படுகிறது.