ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அரசை மட்டுமே நம்பக் கூடாது..!!!
ஜி20 மாநாட்டை தலைமை ஏற்று நடத்தும் ஷேர்பா பதவியை அமிதாப் காந்த் வகித்து வருகிறார். இவர் ஜூன் 28ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,அரசாங்கம் சில கையகப் படுத்தும் திட்டத்தை மட்டுமே நம்பாமல் உள்நாட்டு சந்தையை கருத்தில் கொள்ள வேண்டும் என்றார் ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். பாலின பாகுபாடு இல்லாமல், பெண்கள் முன்னேற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முன்னேற மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு வகையான ஆதரவு தருவதாக கூறிய அவர், அதே நேரம் அரசாங்கத்தை மட்டுமே நிறுவனங்கள் நம்பி இருக்கக் கூடாது என்று கூறினார். சந்தையில் இறங்கி வேலை செய்வது நிறுவனங்களில் முக்கியமானது என்று கூறிய அவர், அரசாங்கங்கள் நிதி மற்றும் மேலாண்மை பணிகளை மட்டுமே செய்யும் என்றார். பெண்கள் முன்னேற ஆண்களின் மனநிலையும் மாற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவிலும் தெற்கு ஆசியாவிலும் தாய்மார்கள் மகன் பேரில் சொத்து வாங்குவதாக கூறிய அவர், மகள்கள் புறக்கணிக்கும் சூழல் உள்ளது என்றார். அப்படி ஒரு மாற்றம் நிகழ்ந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் நல்ல முன்னேற்றம் இந்தியாவில் இருக்கும் என்றார். சுற்றுலா சார்ந்த வணிகம் இந்தியாவை முன்னேற்றும் என்றும் அமிதாப் காந்த் கூறினார் . இந்தியாவுக்கு மட்டுமின்றி, நேபாள், வங்கதேசம் ஆகிய நாடுகளும் சுற்றுலாவிற்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும் என்று தெரிவித்தார்.