இருமடங்கான கிரடிட் கார்டு வாராக்கடன்..
கடன் வாங்கிக் கொள்கிறீர்களா என்று டார்சர் செய்வது ஒரு ரகம் என்றால், வாங்கிய கடனை திரும்ப வசூலிப்பது இன்னொரு ரகமான தலைவலி. இரண்டாவது ரக தலைவலி வங்கிப் பணியாளர்களுக்கானது. இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி தனது புதிய நிலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த தரவுகளின்படி,பொதுத்துறை வங்கிகளில் கிரடிட் கார்டு வாங்கி பயன்படுத்திவிட்டு அதனை திரும்ப செலுத்தாமல் இருப்போரின் விகிதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. பொதுத்துறை வங்கிகளில் கிரடிட் கார்டுகளின் வாராக்கடன் என்பது கடந்தாண்டு வரை 9 விழுக்காடாக இருந்தது. இதுவே கடந்த மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் 18 விழுக்காடாக இரட்டிப்பாகியுள்ளது என்கிறது புள்ளி விவரம். தனியார் மற்றும் அரசத்துறை வங்கிகள் நல்ல லாபத்தை பதிவு செய்து வரும் அதே நேரம், வாராக்கடன் என்பது வங்கிகளுக்கு பெரிய சிக்கல்களை அளித்து வருகிறது. தனிநபர் கடன் என்பது கணிசமாக அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு ஆண்டு கடன் என்பது அதிகரித்தபடியே இருப்பது வங்கிகளுக்கு புதிய சிக்கல்களை அளித்து வருவது குறிப்பிடத்க்கது. நிதி சமநிலை அறிக்கை என்பது ஆண்டுக்கு இருமுறை அதாவது 6 மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது