LRS,TCS குறித்து முக்கிய அறிவிப்பு..
ஏகப்பட்ட பணம் இருந்தாலும் வெளிநாடுகளுக்கு சென்று செலவிட்டால் எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதை மத்திய அரசு கண்காணித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளில் இந்திய ரூபாயை செலவிடும் அளவு என்பது வரைமுறைபடுத்தவே LRS என்ற திட்டம் உள்ளது. இதற்கான வரி வசூலிப்பை TCS என்று அழைப்பார்கள். அதாவது பணத்தின் ஆதாரத்திற்கான வரி என்பதே இதன் பொருள். இந்த நிலையில் LRS திட்டத்தில் எந்த தொகைக்கு எவ்வளவு வரி என்பது குறித்து மத்திய அரசு அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, எந்த வகையில் இந்திய ரூபாயை ஓராண்டுக்குள் 7 லட்சம் ரூபாய் வரை எடுத்துச்சென்று செலவிட்டாலும் எந்த வரியும் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஓராண்டில் 7 லட்சம் ரூபாய் வரை வெளிநாட்டில் செலவு செய்தால் எந்த வரியும் டிசிஎஸ் வகையில் வசூலிக்கப்படாது என்று கூறியுள்ள நிதி அமைச்சகம், கிரடிட் கார்டு வகையில் செலவழிப்பதில் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. உயர்த்தப்பட்ட கிரடிட் கார்டு எல்ஆர்எஸ் முறைப்படி,வரும் அக்டோபர் 1 முதல் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சுற்றுலாவுக்கு சென்று 1 ஆண்டுக்குள் 7 லட்சம் ரூபாய் செலவு செய்தால் எந்த வரியும் கிடையாது. 7 லட்சம் ரூபாய் என்பது கல்வி சார்ந்து செலவிடப்படும் பட்சத்தில் அரை விழுக்காடு டிசிஎஸ் வசூலிக்கப்படும். மருத்துவ காரணங்களுக்கு செலவிடும்போது 5 விழுக்காடு வரி வசூலிக்கப்படும். மற்ற காரணங்களுக்கு 20 விழுக்காடு டிசிஎஸ் வசூலிக்கப்படுகிறது. உயர்த்தப்பட்ட புதிய விகிதம் அமலுக்கு வரும்பட்சத்தில் வெளிநாட்டு சுற்றுலா செல்வோரும் இனி அதிக வரிசெலுத்த இருக்கின்றனர்.