வீட்டில் இருந்து வேலை செய்வதில் புதிய டிவிஸ்ட்..
உலகளவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இன்போசிஸ் நிறுவனம் உள்ளது, இந்த நிறுவனம் தனது பணியாளர்களை மீண்டும் அலுவலகத்துக்கு வர அழைப்பு விடுத்து வருகின்றது. இந்த சூழலில் அந்த நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டம் அண்மையில் நடந்தது. இதில் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சலில் பாரெக் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய சலில் இந்தியாவில் இன்னும் பல தனது வாடிக்கையாளர்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற கோரி வருவதாக தெரிவித்தார். ஏற்கனவே ஹைப்ரிட் வகையில் பணியாற்ற தங்கள் நிறுவன பணியாளர்களுக்கு அனுமதி வழங்கியுள்ள இன்போசிஸ் நிறுவனம்,சில வாடிக்கையாளர்கள் workfrom home பணியாளர்கள்தான் வேண்டும் என்று கேட்பதாக கூறியுள்ளார். வீட்டில் இருந்து பணியாற்றும் பணியாளர்களை ஒன்றிணைக்கும் குழு அலுவலகங்களுக்கு வந்து பணியாற்றுவார்கள் என்றும் சலில் தெரிவித்துள்ளார். இன்போசிஸ் நிறுவனத்தில் சுமார் 3 லட்சத்து 40 ஆயிரம் பணியாளர்கள் இருக்கின்றனர். அமெரிக்காவில் வீட்டில் இருந்தே பணியாளர்கள் வேலை செய்யும் முறை கடந்த வாரம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் இந்தியாவில் இது இன்னும் கட்டாயமாக ரத்து செய்யப்படவில்லை.வாடிக்கையாளர்கள் தேவைக்கு ஏற்பவே வீட்டில் இருந்து பணியாற்றுவதா இல்லை அலுவலகம் வந்து பணியாற்றுவதா என்பது முடிவு செய்யப்படும் என்று சலில் தெரிவித்துள்ளார்.