உலகின் முதல் பறக்கும் காரின் விலை எவ்வளவு தெரியுமா..
உலகின் முதல் பறக்கும் காருக்கான ஒப்புதலை அமெரிக்க அரசு Alef Aeronautics நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. இந்த பறக்கும் கார் 100 விழுக்காடு மின்சாரத்தில் இயங்கக் கூடியது. இந்த நிறுவனம் FAA எனப்படும் அமெரிக்க விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தின் ஒப்புதலை பெற்றுள்ளது. மின்சார பறக்கும் கார்களுக்கான திட்டங்கள்,வழிமுறைகளை FAA வகுத்து வருகிறது. அமெரிக்க வீதிகளில் இந்த காரை எங்கு வேண்டுமானாலும் இயக்கும் வகையில் ஒப்புதல் கிடைத்திருக்கிறது. உள்ளூர் பணத்தில் 3 லட்சம் டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 2 கோடியே 46 லட்சம் ரூபாயாக இதன் விலை உள்ளது. 2025 ஆண்டுக்குள் வணிக ரீதியிலான பணிகளை அலீஃப் நிறுவனம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 440 பேரிடம் இருந்து ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளதாக அலீஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.வழக்கமான பார்க்கிங் கராஜ்களிலேயே இந்த பறக்கும் கார்களை நிறுத்தி வைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 40 கிலோமீட்டர் வேகம் மட்டுமே பறக்க அனுமதி கிடைத்துள்ளது. விபத்து நடக்கும் பகுதிகள், டிராபிக் நிறைந்த இடங்களில் மேலே பறந்து செல்லும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த பறக்கும் காருக்கான விதிமுறைகள் வகுக்கப்படாமல் இருப்பதால் கார் தயாராக இருந்தும் பறக்க முடியாத சூழல் காணப்படுகிறது.