8 துறை பங்குகள் வளர்ச்சிக்கு என்னாச்சி..
இந்தியாவில் முக்கியமான 8 துறைகளை கோர் செக்டார்கள் என்பார்கள். இந்த 8 துறைகளும் கடந்த மே மாதத்தில் 4.3 விழுக்காடாக குறைந்துள்ளது. கச்சா எண்ணெயின் உற்பத்தி குறைந்தது. இயற்கை எரிவாயு மற்றும் மின்சார உற்பத்தி ஆகியவற்றின் உற்பத்தி குறைந்துவிட்டது. கடந்தாண்டில் இந்த முக்கிய துறைகளின் உற்பத்தி அளவானது 14.3 விழுக்காடாக இருந்த நிலையில் தற்போது வெறும் 4.3 விழுக்காடாக சரிந்துள்ளது. நிலக்கரி உற்பத்தியானது 7.2 விழுக்காடு உயர்ந்துள்ளது. எண்ணெய் சுத்தீகரிப்பு துறை 2.8 விழிக்காடு உயர்ந்துள்ளது. உரத்துறை 9.7%, ஸ்டீல் துறை 9.2%, சிமெண்ட் துறை 15.5 விழுக்காடும் இந்த முறை வளர்ந்துள்ளன. கச்சா எண்ணெய் உற்பத்தியானது 1.9 விழுக்காடும்,இயற்கை எரிவாயு 0.3 விழுக்காடு,மின்சார உற்பத்தி 0.3 விழுக்காடு ஆகியன தொடர் சரிவுகளை சந்தித்து வருகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40.27 விழுக்காடு அளவாக இருக்கிறது. சிமெண்ட், உரத்துறை, ஸ்டீல் மற்றும் நிலக்கரி உள்ளிட்ட துறைகள் வலுவான வளர்ச்சியை பெற்றுள்ளதாக கூறும் மூத்த பொருளாதார நிபுணர் அதிதி நாயர், பெரிய பாதிப்பு இல்லை என்று கூறியுள்ளார் தொடர்ந்து இரண்டாவது மாதமாக சிமெண்ட் உற்பத்தி அதிகரித்துள்ளது. ஸ்டீல் உற்பத்தியும் 9.2 விழுக்காடு உயர்ந்துள்ளதால் கட்டுமானத்துறை வளர்ந்து வருகிறது என்பது அர்த்தம் என்று அதிதி கூறியுள்ளார்.