கிஃப்ட் நிஃப்டி பற்றி தெரியுமா?

இந்திய பங்குச்சந்தைகளை சர்வதேச அளவில் பெரிதாக வளர்க்கும் முயற்சியாக கிஃப்ட் நிஃப்டி என்ற புதிய பிரிவை தேசிய பங்குச்சந்தை தொடங்கியிருக்கிறது. இதுவரை பங்குச்சந்தை முதலீடு தொடர்பான ஒப்பந்தங்கள் சிங்கப்பூரில் இருந்து வந்த நிலையில் ஜூலை 3ஆம் தேதி திங்கட்கிழமை முதல் இந்தியாவிலேயே செயல்படும் என்று தேசிய பங்குச்சந்தை அறிவித்துள்ளது. இந்த பங்குச்சந்தையில் தொடங்கப்படும் வர்த்தகத்தில் மீதமுள்ள பங்குகள் குஜராத்தின் காந்தி நகருக்கு வந்துவிடும். NSE IFSC-SGX Connect என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த பங்குச்சந்தையின் உட்பிரிவின் மூலம் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்ய இயலும். 5 ஆண்டுகளாக நிலவி வந்த பிரச்சனையை இந்திய தேசிய பங்குச்சந்தை மற்றும் சிங்கப்பூர் பங்குச்சந்தை அதிகாரிகள் பேசி சுமூக முடிவை எடுத்துள்ளனர். இந்த பங்குச்சந்தையில் வரும் லாபத்தை யார் எடுத்துக்கொள்வது என்று நிலவிய பிரச்னையில் ஆளுக்கு பாதி அதாவது 50-50 ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. Gift Nifty 50, Gift Nifty Bank, Gift Nifty Financial Services, Gift Nifty IT derivative contracts ஆகிய 4 பிரிவுகளில் முதலீடுகளை செய்ய இயலும். முக்கியமான ஒப்பந்தங்கள் அமெரிக்க டாலரிலேயே இருக்கும்.இந்த பங்குச்சந்தை 21 மணி நேரம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய பங்குச்சந்தைகளை இணைந்த அளவில் இங்கு பங்குகளை வாங்கவோ,விற்கவோ முடியும், காலை 6.30 மணி முதல் மதியம் 3.40 வரை ஒரு பாதியாகவும், மதியம் 4.35 முதல் அதிகாலை 2.45 வரை ஒரு பிரிவாகவும் இந்த பங்குச்சந்தை இயங்கும் SGX Nifty 50 Index futures-இன் அளவு என்பது 1லட்சத்து 56 ஆயிரத்து547 என்ற அளவில் இதில் முதலீடுகள் செய்யும் வகையில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.