மஸ்கின் டிவிட்டருக்கு புதிய தலைவலி..
ஆஸ்திரேலியாவைச் சேர்த்த தனியார் நிறுவனம் அமெரிக்க நீதிமன்றத்தில் டிவிட்டர் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறது. செய்த வேலைக்கு பணம் தராமல் டிவிட்டர் நிறுவனம் இழுத்தடிக்கிறது என்பதே புகாராகும்.ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம், டிவிட்டர் நிறுவனத்துக்காக 4 நாடுகளில் பணிகளை செய்து வந்தது. எனினும் பல மாதங்களாக டிவிட்டர் நிறுவனம் நிலுவைத் தொகையை தரவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து டிவிட்டர் நிறுவனத்துக்கு எதிராக கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா நிறுவனத்துக்கு மட்டும் 6லட்சத்து 65 ஆயிரம் அமெரிக்க டாலர்களை டிவிட்டர் நிறுவனம் தரவேண்டும் என்று கூறப்படுகிறது.44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகைக்கு டிவிட்டரை மஸ்க் வாங்கிவிட்ட நிலையில், அடுக்கடுகாக கடன் புகார்கள் மஸ்க்கின் நிறுவனம் மீது முன்வைக்கப்பட்டு வருகிறது. லண்டன்,டப்ளின்,சிங்கப்பூர் அலுவலகங்களில் டிவிட்டர் நிறுவனத்துக்காக ஆஸ்திரேலிய நிறுவனம் சென்சார்களை பொருத்தி இருந்தது.அதற்கான தொகையைத்தான் பெற முடியாமல் அந்நிறுவனம் தற்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளது. டிவிட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்கியது முதல் மக்கள் தொடர்பு அதிகாரிகள் என்று யாரும் இல்லாததால் ,உண்மையில் எவ்வளவு பணம்தான் தரவேண்டும் என்பதை விசாரிக்க கூட யாரையும் மஸ்க் பணியில் அமர்த்தவில்லை. கடந்த மேமாதத்தில் இதே பாணியில் அமெரிக்க நிறுவனம் ஒன்றும் மஸ்கின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இங்கிலாந்தின் அரச குடும்பத்தின் நேரடி தொடர்பில் உள்ள கிரவுன் எஸ்டேட் நிறுவனத்துக்கும் டிவிட்டர் நிறுவனம் கட்டண பாக்கி வைத்திருப்பதாக புகார்கள் குவிந்துள்ளன. இந்த அடுக்கடுக்கான கடன் புகார்களால் டிவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் மஸ்குக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது.