சம்பளம் எவ்வளவு தெரியுமா?
மஹிந்திரா குழுமத்தின் எம்டி மற்றும் தலைமை செயல் அதிகாரியான அனிஷ் ஷா என்பவருக்கு சம்பள உயர்வாக 83 விழுக்காடு அளிக்கப்பட்டுள்ளது.அவருக்கு மாத சம்பளமாக 55 லட்சம் ரூபாய் அளிக்கப்பட இருக்கிறது. மஹிந்திரா குழுமத்தின் ஆட்டோமொபைல்ஸ் மற்றும் விவசாய பிரிவை கவனித்து வரும் தலைமை செயல் அதிகாரியான ராஜேஷ் ஜெஜூரீக்கருக்கு மாத சம்பளமாக 48 லட்சம் ரூபாய் கிடைக்க இருக்கிறது.இது அவர் தற்போது வாங்கி வரும் சம்பளத்தைவிட 84 விழுக்காடு அதிகமாகும். மஹிந்திரா குழுமத்தின் பல்வேறு பிரிவுகளில் மொத்தமாக சேர்த்து 2023 நிதியாண்டில் வருவாய் மட்டும் 1 லட்சத்து 21 ஆயிரத்து 269 கோடி ரூபாயாக உள்ளது.இது கடந்தாண்டைவிட 34 %அதிகமாகும்.மொத்த நிகர லாபம் என்பது 10,282 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.இந்த வருவாய் என்பது கடந்தாண்டை ஒப்பிடுகையில் 56% அதிகமாகும். மஹிந்திரா குழுமத்தில் இவர்கள் இருவருக்கும் அளிக்கப்பட்ட சம்பளம் என்பது 2023 மற்றும் 2025 நிதியாண்டுக்குள் இவர்களின் செயல்திறனை பொறுத்து மாறுபடும் என்பது அந்த நிறுவனத்தின் விதியாகும். தற்போது வரை 84% சம்பள உயர்வு பெற்றிருக்கும் இவர்களின் சம்பம் குறித்த அறிவிப்பு இந்திய அளவில் பேசப்பட்டு வருகிறது. இவர்களின் உயர்த்தப்பட்ட சம்பளம் என்பது வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வர இருக்கிறது.