விடாமல் முன்னேறும் இந்திய சந்தைகள்:
இந்திய பங்குச்சந்தைகள் கடந்த 7 நாட்களாகவே மிகச்சிறப்பான வளர்ச்சியை கண்டு வருகிறது. ஜூலை 6ஆம் தேதி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு என் சென்செக்ஸ் 339 புள்ளிகள் உயர்ந்து 65 ஆயிரத்து785 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது.தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 98.80 புள்ளிகள் அதிகரித்து 19 ஆயிரத்து 497 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. துவக்கத்தில் பங்குச்சந்தைகள் தொய்வுடன் தொடங்கினாலும், பின்னர் நேரம் செல்ல செல்ல பங்குச்சந்தைகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. முதலீட்டாளர்களின் சந்தை மூலதனம் என்பது ஒரே நாளில் 1லட்சத்து 77 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்து 301.67 லட்சம் கோடி ரூபாயானது. M&M, Apollo Hospitals, Power Grid Corporation, Reliance Industries டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் பெரிய லாபத்தை பதிவு செய்தன.Eicher Motors, HDFC Life Insurance, Maruti Suzuki, HCL Technologiesஆகிய நிறுவனங்கள்சரிவை சந்தித்தன. ஆற்றல்,எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை பங்குகள் 2 விழுக்காடு அளவுக்கு ஏற்றம் கண்டன.ஆட்டோமொபைல் மற்றும் சுகாதாரத்துறை பங்குகள் 1 விழுக்காடு உயர்ந்தன. 200க்கும் அதிகமான நிறுவனங்கள் கடந்த 52 வாரங்களில் இல்லாத உச்சம் தொட்டன.
தங்கம் விலையில் பெரிய மாற்றமில்லை.ஒரு கிராம் தங்கம் 5ஆயிரத்து 460 ரூபாயாக இருக்கிறது. ஒரு சவரன் தங்கம் 43 ஆயிரத்து 680 ரூபாயாக இருக்கிறது. வெள்ளி விலை கிராமுக்கு 90 காசுகள் அதிகரித்து 76 ரூபாய் 70 காசுகளாக உள்ளது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 900 ரூபாய் உயர்ந்து 76 ஆயிர்தது 700 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலைகளுடன் 3 விழுக்காடு ஜிஎஸ்டியும்,செய்கூலியும் சேதாரமும் சேர்த்தால்தான் உண்மையான விலை கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.