சிம்கார்டு போல கடன் அட்டையையும் மாற்றிக்கொள்ள வசதி
ஒரு நிறுவனத்தின் சிம்கார்டு சேவை பிடிக்கவில்லைஎன்றால் வேறு நிறுவனத்துக்கு மாறிக்கொள்ள டிராய் வசதி செய்துகொடுத்துள்ளது. இதே பாணியில் இனி கிரிடிட் மற்றும் டெபிட் கார்டில் எந்த வங்கி நெட்வொர்க்குக்கு வேண்டுமானலும் மாற்றிக்கொள்ளும் வகையில் புதிய வரைவு திட்டத்தை ரிசரவ் வங்கி பரிசீலித்து வருகிறது. தற்போது வங்கிகள்-வங்கி நெட்வொர்குகளான மாஸ்டர் கார்டு,ரூபே,விசா உள்ளிட்டவை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இது வாடிக்கையாளர்களுக்கு சாய்ஸ் இல்லாத சூழலை ஏற்படுத்தியுள்ளதாக புகார்கள் வந்தனஸ்ரீ இது தொடர்பாக ஒரு ஆய்வுக்கூட்டத்தை ரிசர்வ் வங்கி நடத்தியது. அந்த கூட்டத்தில் வாடிக்கையாளர்களை குறிப்பிட்ட ஒரு நெட்வொர்க்கை பயன்படுத்த நிர்பந்திக்கும் சிக்கல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்கு தீர்வு காணும் வகையில், எந்த நெட்வொர்க் தேவை என்பதை வாடிக்கையாளர் முடிவு செய்யும் வகையில் மாற்றங்களை செய்ய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த புதிய வசதி வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை இதுதொடர்பான கருத்துகளை பெறவும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கிரிடிட் கார்டில் யுபிஐ வசதியை தற்போது ருபே நெட்வொர்க்கை களமிறக்க உள்ளது. ஆனால் பிற நெட்வொர்க்குளான Mastercard, Visa, American Express and Diners Club ஆகியவற்றில் இந்த வசதிகள் இல்லை. என்றாலும் இதனை வரைமுறைப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.