இனி தக்காளியை பார்க்க கூட காசு தரணும் போல..
விற்றால் 5 ரூபாய்க்கு கூட விற்க முடியாமல் அடிபட்டு வீணாக குப்பையில் கொட்டப்படும் தக்காளி, கடந்த சில நாட்களாக ஆடாத ஆட்டம் ஆடி வருகிறது. பெரிய மெட்ரோ நகரங்களில் மிக அதிகபட்சமாக 155 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி விற்கப்படுகிறது. மகாராஷ்டராவின் மும்பையில் மிகக்குறைவாக ஒரு கிலோ 58 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டெல்லியில் ஒரு கிலோ டெல்லியில் 110 ரூபாயாகவும்,சென்னையில் ஒரு கிலோ தக்காளி 117 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்தியாவின் ஒரு கிலோ சராசரி விலையாக 83.29 ரூபாயாகவும், சில்லறை விலையாக 100ரூபாயாக உள்ளது. மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில்தான் அதிகபட்சமாக 155 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சராசரியாக 100 ரூபாய் அளவுக்கு விவசாயிகளுக்கு கிடைக்கும் நிலையில், இடைத் தரகர்களுக்குதான் செல்கிறது. நாடு முழுவதும் தக்காளி விலையில் திடீர் மாற்றத்துக்கு மிகமுக்கிய காரணமாக பார்க்கப்படுவது பருவம் தவறி பெய்த மழைதான் என்று வணிகர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மாதத்தில் அடுத்த 15 நாட்களுக்குள் நாடு முழுக்க தக்காளி விலை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.