ரஷ்யாவில் வணிகத்தை தொடரும் பிரபல நிறுவனம்!!!!
உக்ரைன் மீது ரஷ்யா ஓராண்டுக்கும் மேலாக போரை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் மேற்கத்திய நிறுவனங்கள் எதிர்த்து வருகின்றன. ஆனால் பிரிட்டனைத் தலைமையிடமாக கொண்டு இயங்கும் யுனிலிவர் நிறுவனம் இன்னும் ரஷ்யாவில் தனது வணிகத்தை தொடர்ந்து வருகிறது.
அடிப்படைத் தேவைகளை மட்டுமே விற்று வருவதாக கூறும் யுனிலிவர் நிறுவனம் ரஷ்ய பொருளாதாரத்தில் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது. ஓராண்டுக்கு சராசரியாக இந்திய மதிப்பில் 60,000 கோடி ரூபாய்க்கு அதிகமாக வியாபாரத்தை யுனிலிவிர் நிறுவனம் கொண்டுள்ளது.
பிரபல வெளிநாட்டு நிறுவனங்கள் அடுத்தடுத்து ரஷ்யாவில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில் யுனிலிவர் நிறுவனம் தனது வணிகத்தை தொடர்ந்து வருகிறது. இதனை மாரல் ரேட்டிங் ஏஜென்சி என்ற முகமை நிறுவனம் கடுமையாக விமர்சித்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா எடுத்துவரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உலகளவில் பெரிய விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. கச்சா எண்ணெய், காய்கனி, உணவு தானிய விலை உயர்வுக்கு மிகமுக்கியமான காரணமாக கருதப்படும் ரஷ்ய தாக்குதலுக்கு உலகின் பல நாடுகளும் அதிருப்தி தொடர்ந்து வரும் நிலையில் போர் மட்டும் நின்ற பாடில்லை. அதிகப்படியான மனித உயிரிழப்புகள், ஆயுதங்களின் செலவுகள் போரால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உறுதியான நிலைப்பாட்டில் ரஷ்யாவும் உக்ரைனும் உள்ள நிலையில் பெரிய நிறுவனங்கள் தற்போது இருப்பதை மேலும் குறைக்க வாய்ப்புள்ளதால் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றி அமைப்பது முக்கிய அம்சமாக மாறியுள்ளது.