சில நொடிகளில் 500 கோடி லாபம்..
டாடா குழுமத்தின் வணிகம் உயரும்போதெல்லாம் கூடவே அதில் முதலீடு செய்தோறும் வளர்கின்றனர். இந்த நிலையில் இந்த வாரத்தின் வெள்ளிக்கிழமை வர்த்தகம் நடக்கும்போது டாடாவின் டைடன் நிறுவனத்தின் ஜூன் மாதம் வரையிலான காலாண்டின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி,டைடனின் அதிக பங்குகள் வைத்திருக்கும் ரேகா ஜுன்ஜுன்வாலாவுக்கு 500 கோடி ரூபாய் லாபம் கிடைத்திருக்கிறது. டைடன் நிறுவனத்தின் பங்குகள் ஆண்டுக்கு ஆண்டு 20விழுக்காடு உயர்ந்திருக்கிறது.ஜூன் வரை முடிந்த காலாண்டிலும் நல்ல லாபத்தை இந்த நிறுவனம் பதிவு செய்துள்ளது. டைட்டன் நிறுவனத்தின் நகை செய்யும் பிரிவு 21 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளதுடன் புதிதாக 18 கிளை அலுவலகங்களையும் திறந்துள்ளது. அக்சயதிரிதியை மற்றும் திருமண சீசனின் வியாபாரம் அதிகளவில் இருந்ததே இந்த லாபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. தனிஷ்க் நகைக்கடை புதிதாக ஒரு கிளை ஷார்ஜாவில் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவில் ஒரு கிளை உள்ளது. வெளிநாட்டில் மட்டும் 7 கிளைகள் இயங்கி வருகின்றன. டைட்டனின் வணிகத்தை பொறுத்தவரையில் கைகடிகாரங்களின் விற்பனை 8 விழுக்காடு அதிகரித்துள்ளது.