வாட்ஸ்ஆப் , பேஸ்புக்குக்கு விரைவில் கட்டுப்பாடுகள் வரும்….
வாட்ஸ் ஆப்,பேஸ்புக்,டெலிகிராம்,சிக்னல் உள்ளிட்ட செயலிகள் இல்லாதவர்கள் டெக் யுகத்துக்கே வரவில்லை என்ற அளவுக்கு அத்தனை புதிய நுட்பங்கள் இந்த செயலிகளில் உள்ளன. மேலும் இவை தவிர்த்து ஓடிடி எனப்படும் செயலிகளிலும் கட்டுப்பாடுகள் இல்லை என்று புகார் எழுந்துள்ளது. இதையடுத்து ஓடிடி தளங்களை கட்டுப்படுத்த டிராய் எனப்படும் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பணிகளைசெய்துவருகிறது. 14 முக்கிய அம்சங்கள் குறித்து விவாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எவையெல்லாம் வரைமுறைக்குள் வரும் என்றும்,ஓடிடி தளங்களில் என்னென்ன வசதிகள் தரலாம் என்றும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது.போதிய பாதுகாப்பு இல்லாமல் செயலிகள் மற்றும் ஓடிடி செயலிகள் இயங்குவதாகவும் அதனை முறைப்படுத்தவும், ஆன்லைனில் பேசும் கால்களுக்கு கட்டணம் வசூலிக்கவும் தொலைதொடர்பு நிறுவனங்கள் கோரி வருகின்றனர். ஏற்கனவே தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு ஓடிடி தளங்களும் செயலிகளும் உட்பட்ட பிறகு தனியாக மேலும் ஒரு கண்காணிப்பு தேவையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அவசர காலங்களில் மொத்த இணையதள சேவைகளையும் முடக்குவதற்கு பதிலாக தனிப்பட்ட செயலிகளை மட்டும் முடக்குவது நல்ல பலன்தரும் என்ற யோசனையும் அரசின் பரிசீலனையில் இருக்கிறது. ஆனால் இந்த திட்டத்துக்கு பெரிய சமூக வலைதள செயலிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.