தம்ப்ஸ் அப் போட்டது குற்றமா?
கனடா நாட்டில் சஸ்காட்செவான் நகரில் கிறிஸ் ஆக்ச்டர் என்ற விவசாயி வசித்து வருகிறார். அவர் தனது விளை பொருட்களுக்கு அளிக்கப்படும் ரசீதுக்கு பதில் அளிக்கும் வகையில் தம்ப்ஸ் அப் எனப்படும் எமோஜியை அனுப்பினார். வணிக ரீதியிலான பயன்பாட்டில் எப்படி எமோஜியை பயன்படுத்தலாம் என்று இதற்காக ஒரு வழக்கும் நடந்துள்ளது. இந்த வழக்கில் கடுப்பான நீதிபதி ஒப்பந்த விதிகளை மீறியதாக கிறிஸுக்கு ,இந்திய மதிப்பில் 50 லட்சம் ரூபாய் அபராதத்தை விதித்துள்ளார். 2021ஆம் ஆண்டில் 86 டன் விளைப்பொருட்கள் வாங்க Kent Mickleborough என்பவருக்கு வழங்கப்பட்ட ரசீதுக்கான பதிலில்தான் இந்த சர்ச்சைக்குறிய எமோஜி இடம்பிடித்துள்ளது. தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து ஒப்பந்தத்தை கென்ட் கிறிஸுக்கு அனுப்பியுள்ளார். பதிலுக்கு தம்ப்ஸ் அப் மட்டும் அனுப்பிய கிறிஸ் முறையாக ஒப்பந்தத்தில் கூறியபடி உணவப்பொருளை வழங்கவில்லை என்று கென்ட் தனது தரப்புக்கு பதிலாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வழக்கில் பதில் அளித்துள்ள நீதிபதி கீன்,வழக்கமான ஒப்பந்தங்களில் எமோஜிகளை ஏற்க முடியாது என்றும் நீதிபதி கூறியுள்ளார்.