ஐஃபோன் டீலை தட்டி தூக்கிய டாடா குழுமம்
இந்தியாவில் ஐபோன் உற்பத்தி செய்யும் நேரடி நிறுவனங்களாக இதுவரை எந்த நிறுவனங்களும் இல்லாமல் இருந்து வந்தது.இந்த சூழலில் பெங்களூருவில் உள்ள விஸ்ட்ரான் நிறுவனத்தினை வாங்கியதன் மூலம் டாடா குழுமம், ஐபோனை அசம்பிள் செய்யும் முதல் நேரடி நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது. 600 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட இந்த நிறுவனத்தை விஸ்ட்ரானிடம் இருந்து டாடா குழுமம் வாங்கியது. இந்த நிலையில் ஐபோன் தயாரிக்கும் ஆணையை டாடா குழுமம் அதிகாரபூர்வமாக பெற்றுள்ளது. தற்போது பெங்களூரு விஸ்ட்ரான் நிறுவனத்தில் 10ஆயிரத்துக்கும் அதிகமான பணியாளர்கள் வேலை செய்கின்றனர் ஒராண்டுக்கு 1.8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஐபோன்களை விஸ்ட்ரான் நிறுவனம் ஏற்றுமதி செய்து வந்தது. இந்த ஆலையில் தற்போது உள்ளதை விட 3 மடங்கு அதிக பணியாளர்களை பணியில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் கசிந்திருக்கிறது.கடந்த 3 மாதங்களில் மட்டும் விஸ்ட்ரான் நிறுவனம் 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஐபோன்களை விஸ்ட்ரான் நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் நிலவும் மோதல்போக்கை அடுத்து சீனாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்காவின் ஐபோன் நிறுவனம் வெளியேறி வரும் சூழலில்,155 ஆண்டுகள் பழமையான டாடா குழுமம் இந்தியாவின் மிகமுக்கியமான டீலை முடித்திருப்பது பெரிய கவனத்தை பெற்றுள்ளது தமிழ்நாட்டில் டாடா குழுமம் ஏற்கனவே சிப் தயாரிப்பிலும் ஈடுபட இருக்கும் சூழிலில் , டாடா குழுமம் ஆப்பிள் ஐபோன்களை அசம்பிள் செய்யும் உரிமையை பெற்றிருப்பது உலகளவில் முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.