ரிலையன்ஸ் ரீட்டெயிலின் பலே திட்டம்…
இந்தியாவில் பியூச்சர் குழுமம் மிகமுக்கிய வணிகங்களை செய்து வந்தது. தொடர் இழப்புகளால் பியூச்சர் குழும வணிகங்கள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து திவால் நோட்டீஸை அளிக்க பியூச்சர் குழுமம் தயாராகிவிட்டது. இந்த நிலையில் கடனில் தடுமாறும் பியூச்சர் குழுமத்தை மீட்க 3 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அதில் ரிலையன்ஸ்குழுமத்தின் ரிலையன்ஸ் ரீட்டெயில் நிறுவனமும் ஒன்று, ரிலையன்ஸ் குழுமம் தவிர்த்து ஜிண்டால் இந்தியா நிறுவனமும், டோனியர் நிறுவனமும் பியூச்சர் குழும சரிவை மீட்க திட்டங்களை முன்னெடுத்துள்ளன. திவாலாகிவிட்டதாக பியூச்சர் குழுமம் தெரிவித்ததை அடுத்து நீதிமன்றம் சார்பில் அவில் மெனிசெஸ் என்ற நிறுவனம் நியமிக்கப்பட்டது. இந்த நிறுவனம் பியூச்சர் குழும இழப்புகளை ஈடுகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 49 நிறுவனங்கள் பியூச்சர் குழும வணிகத்தை வாங்க ஆர்வம் காட்டியுள்ளன.
இதில் பிரதானமான 3 நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களாகும். பிக் பசார், ஈசிடே, காப்பீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சேவைகளை பியூச்சர் குழுமம் நடத்தி வந்தது. அமேசான் மற்றும் ரிலையன்ஸ் இடையே நேரிட்ட மோதல் காரணமாக விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. நினைவிருக்கலாம். கடந்தாண்டு ஜூலையில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த இயலாமல் இந்தாண்டு மார்ச் மாதம் திவால் நோட்டீஸ் அளித்துள்ளது. விட்டதை பிடிக்கும் முயற்சியில் ரிலையன்ஸ் மீண்டும் ஈடுபட்டுள்ளதால் பங்குச்சந்தைகளில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பிக்பசாரை மீண்டும் ரிலையன்ஸ் கைப்பற்றும் பட்சத்தில் தற்போதுள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் வணிகம் மேலும் விரிவடைய அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.