ஐபிஎல் மதிப்பு இவ்வளவு உயர்ந்திருக்கு தெரியுமா..
உலக முதலீட்டு வங்கிகளில் முக்கியமான நிறுவனமான Houlihan Lokeyஅண்மையில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎலின் மதிப்பு எவ்வளவு என்பது குறித்து ருசிகரமான தகவல்கள் இடம்பிடித்துள்ளன. 2023-27வரையிலான காலகட்டத்தில் ஐபிஎல் போட்டிகளை ஒலிபரப்பும் உரிமையை டிஸ்னிஸ்டாரும், வயாகாம் 18 நிறுவனங்களும் பெற்றுள்ள நிலையில் ஐபிஎல் அமைப்பின் ஒட்டுமொத்த பிராண்ட் மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. எளிமையாக சொல்ல வேண்டுமெனில் 2022-ல் 8.5பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த பிராண்ட் மதிப்பு , 15.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்திருக்கிறது. 2008-ல் இருந்து 2023 வரையிலான காலகட்டத்தில் ஐபிஎல் போட்டிகளின் ஊடக உரிமை மட்டும் 18விழுக்காடு ஏற்றம் கண்டுள்ளன.
2017 முதல் 2023 வரையில் மட்டும் 196%உயர்ந்திருக்கிறது.உலகளவில் அதிகம் பார்க்கப்படும் என்பிஏ கூடைப்பந்து,பிரிட்டன் கால்பந்து போட்டிகள் மற்றும் பண்டஸ்லிகா போட்டிகளைவிட அதிகளவில் ஒளிபரப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
திரையரங்குகளில் படம் பார்க்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்து வரும் சூழலில், ஐபிஎல் போட்டிகளை பார்க்கும் ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளதும் ஐபிஎல் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது. பிசிசிஐ, ஐசிசிஆகியவற்றின் ஒப்புதலுடன் நடக்கும் இந்த போட்டிகளில் மிக மதிப்பு மிக்க பிராண்டாக சிஎஸ்கே திகழ்கிறது. இரண்டாவது இடத்தில் விராட்கோலி இருக்கும் ஆர்சிபி அணி திகழ்கிறது. ஒரு பொருளை விற்கவேண்டுமெனில் ஐபிஎல் போட்டிகள் மிக எளிதான களமாக மாறியுள்ளதாகவும், கடந்த சீசனில் மட்டும் 10 ஆயிரத்து 120 கோடி ரூபாய் அளவுக்கு ஐபிஎலின் வருவாய் உயர்ந்திருக்கிறது. 16, சீசன்கள் முடிந்துள்ள போதும் ஆண்டுக்கு ஆண்டு போட்டிகள் மீதான ஆர்வம் சற்றும் குறைந்தபாடில்லை. புதிய ஆய்வறிக்கையின்படி ஐபிஎலின் மொத்த பிராண்ட் மதிப்பு மட்டும் 80 விழுக்காடு உயர்ந்துள்ளது.அதாவது 3.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற உச்சத்தை தொட்டுள்ளது.