டெலிவரி பார்ட்னர்களுக்கு உரிய தொகை கிடைக்கிறதா?
இந்தியாவில் உணவு டெலிவரி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து டெலிவரிக்கு என்று தனியாக கட்டணம் வசூலிக்கின்றனர். இந்த கட்டணம் டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு செல்வதாகவே பலரும் கருதுகின்றனர்.உண்மையில் என்னதான் நடக்கிறது தெரியுமா.. உணவு டெலிவரி செய்வோருக்கு என சில அம்சங்கள் கருத்தில் கொள்ளவேண்டியிருக்கின்றன.ஒரு டெலிவரிக்கு இத்தனை தொகை என்று இருக்கிறது. ஒரு டெலிவரியில் எத்தனை கிலோமீட்டர் டெலிவரி ஏஜெண்ட் பயணிக்கிறார்,அடிப்படை கட்டணம் என்பது தொடர்ந்து ஒரே மாதிரியாக இருப்பதில்லை.மாறாக நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை டெலிவரி ஏஜெண்ட் எட்டியுள்ளாரா என்றே நிறுவனங்கள் பார்க்கின்றன.இது டெலிவரி ஏஜெண்டுகளில் ஒருவருக்கு ஒருவர் மாறுபடுவதாகவே இருக்கிறது. ஜொமேட்டோ.. இந்த விவகாரம் தொடர்பாக ஜொமேட்டோ நிறுவனத்தின் ஒரு முகவரை சந்தித்தோம்.உண்மையில்,வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் கட்டணம் முழுவதுமாக டெலிவரி செய்யும் மனிதருக்கு கிடைப்பதில்லை என்பது தெரியவந்துள்ளது.கிக் எகானமி எனப்படும் நிலையற்ற வேலைகளில் டெலிவரி ஏஜெண்ட்களுக்கு குறைவான தொகையை நிறுவனங்கள் கணக்கிட்டு ஊழியர்களுக்கு அளிக்கின்றன. ஆனால் ஜொமேட்டோவில் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் கட்டணம் என்பது முழுவதும் டெலிவரி செய்யும் முகவர்களுக்கு தரப்படுவதாக கூறப்படுகிறது. இதனை பரிசோதித்தோம், பில்லில் குறிப்பிட்ட தொகையில் ஒரு முகவருக்கு நிறுவனம் 65 முதல் 70 % வரை மட்டுமே தருகிறது.இது ஒவ்வொரு முகவருக்கும் நடக்கிறது. இதனை படிக்கும் உங்களுக்கும் இது உண்மை என்று புரிய வாய்ப்பு இருக்கிறது. இதற்கு ஜொமேட்டோவிடம் இருந்து எந்த வலுவான விளக்கமும் அளிக்கப்படவில்லை.டெலிவரி செய்யும் ஏஜெண்ட்களுக்கு எந்த நிலையான வருமானமும் கிடைப்பதில்லை,ஜொமேட்டோவில் யாருக்கு எவ்வளவு தரவேண்டும் என்று விளக்குவது புரியவே இல்லை. சில டெலிவரிக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட தொகையை விட அதிகமாகவும் சில சமயங்களில் தரப்படுகிறது. பிளிங்கிட் நிறுவனத்தை வாங்க பெரிய தொகையை ஜொமேட்டோ நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. எனவே நஷ்டத்தை குறைக்க ஏதேனும் செய்கிறது ஜொமேட்டோ நிறுவனம். உண்மையில் பிளிங்கிட்டை கைப்பற்றிய பிறகுதான் டெலிவரி முகவர்களுக்கு ஊதியம் மாறுபடுகிறது.ஸ்விக்கி
இந்தாண்டு மே மாதத்தில் ஸ்விக்கி நிறுவனம் தனது முதல் காலாண்டில் லாபம் பதிவு செய்திருப்பதாக கூறியுள்ளது. இதில் டெலிவரிஏஜெண்ட்களும் பலனடைந்திருப்பதாக அந்நிறுவன சிஇஓ கூறியுள்ளார் .ஆனால் உண்மை அதுவல்ல.ஸ்விக்கியில் உரிய தொகை அளிக்கப்படுவதில்லை என்ற புகார் உள்ளது.கொரோனா காலகட்டத்தின் ஊரடங்குக்கு பிறகு ஊதியம் குறைவாகவே கிடைப்பதாக டெலிவரி ஏஜெண்ட்கள் கூறுவதை காண முடிகிறது. ஏன் கடந்த மே மாதத்தில் சென்னையில் டெலிவரி ஏஜெண்ட்கள் போராட்டமும் நடத்தியதை மறக்க முடியாது. வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் தொகையில் தங்கள் டெலிவரி ஏஜெண்ட்களுக்கு ஓரளவு பணம் தருவதாக பில்லில் கூறப்படுகிறது.ஆனால் முழு தொகை கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.இது தொடர்பான ஆய்விலும் , நிறுவனங்கள் அளிக்கும் தொகை முழுமையாக ஏஜெண்ட்களுக்கு கிடைப்பதில்லை என்பதும் உறுதியாகிறது. இவை தவிர்த்து மழை காலங்களில் கூடுதல் தொகை,தங்கள் தளத்தின் கட்டணமாக ஒரு ஆர்டருக்கு 2 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.ஒரு நாளைக்கு 15 லட்சம் ஆர்டர்களை பெறும்போது இந்த தொகை ஏங்கே செல்கிறது என்பதை பாருங்கள்.. இதற்கு வழியே இல்லையா?
கிக் பொருளாதரத்தில் பணியாற்றுவோருக்கான உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும். இதில் அரசாங்கத்தின் பங்களிப்பு முதன்மையானது. நமது அண்டைநாடான சீனாவில் இது தொடர்பாக நிறுவனங்கள்,ஊழியர்களை அழைத்து அந்நாட்டு அரசு தொடர்ந்து பேசி வருகிறது. அமெரிக்காவில் இது தொடர்பாக ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு பணம் தரவேண்டும் என்ற வரம்பே வைக்கப்பட்டுள்ளது.ஊழயர்களை ஒடுக்க நினைக்கும் நிறுவனங்களை அரசாங்கம் இதன் மூலம் கண்டிக்க முடியும். இதே பாணியில் மத்திய அரசும் கிக் பொருளாதாரத்தில் உள்ளோரை பாதுகாக்க வேண்டும்.
இந்த வகை கே வடிவிலான பொருளாதாரம் சமமாக பகிரப்படவில்லை.சில துறைகளின் வளர்ச்சி அசுர வேகத்தில் உள்ளது. சில குறைந்த வருவாய் உள்ள ஊழியர்கள் சம்பளம் இன்னும் மாறுபடவே இல்லை.இதுபோன்ற சிக்கல் உள்ளோரை அழைத்து கூட்டம் போடவேண்டும். குறிப்பாக டெலிவரி முகவர்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும். அதுவரை தற்போது நிலையேதான் தொடரும். வேறுவழியே இல்லை.