மத்திய அரசு தீவிர நடவடிக்கையாம்!!!!
மத்திய நுகர்பொருள் விவகாரங்கள் துறை செயலர் ரோஹித் குமார் சிங் என்பவர் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ரோஹித், சந்தையில் இந்தியாவில் தக்காளி விலையை குறைக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். இதுவரை 300 மெட்ரிக் டன் அளவுக்கு தக்காளியை மத்தியஅரசு வாங்கி சந்தையில் விற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சந்தையில் தக்காளி விலை சீரடையும் வரை தொடர்ந்து மத்திய அரசு தக்காளி கொள்முதல் செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் தலையீட்டுக்கு பிறகு மொத்த விலையில் ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்றும், சில்லறை விலை ஒரு கிலோ 116 ரூபாயாக சராசரியாக விற்கப்படுவதாகவும் ரோஹித் குறிப்பிட்டுள்ளார்.
கடந்தமாதம் 7ஆம் தேதி உணவு தானியப் பொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்திமத்திய அரசு உத்தரவிட்டது. அதில் துவரம் பருப்பின் ஆதரவு விலை ஒரு குவின்டால் 7 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.
இவர்கள் விலையை ஏற்றிய நிலையில் உற்பத்தி கணிசமாக குறைந்தது. நாட்டின் 518 இடங்களில் இருந்து தக்காளி ஒவ்வொரு நாளும் வாங்கப்படுவதாக ரோஹித் தெரிவித்துள்ளார். இந்தாண்டு ஜூன் ஜூலையில் வழக்கத்துக்கு மாறான பெரியளவிலான மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,நிலைமை வரும் ஆகஸ்ட் மாதத்தில் மெல்ல சீரடைய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.