உலகத்திலேயே இந்தியாவில்தான் அதிகமாம்…..
சிறிய அளவில் உள்ள வணிகத்தை பெருக்க ஒரே வழியாக ஆரம்ப பங்கு வெளியீடு உதவுகிறது. சிறு குறு நிறுவனங்கள் இதனை பயன்படுத்தி பெரிய அளவில் முன்னேறியுள்ளன. இந்த நிலையில் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான ஆரம்ப பங்கு வெளியீடான ஐபிஓகள் இந்தியாவில்தான் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் இதுவரை 80 ipoகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுவே கடந்தாண்டு 60 ஆக இருந்தது. இந்தாண்டு இதன் எண்ணிக்கை 33 விழுக்காடு அதிகரித்துள்ளது. எர்ஸ்ட் அண்ட் எங்க் என்ற நிறுவனத்தின் அறிக்கையில் இது தெரியவந்துள்ளது. ஐபிஓகள் மூலமாக மட்டும் இதுவரை 2.1 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நிதி கிடைத்துள்ளது. இது கடந்தாண்டைவிட 62 விழுக்காடு குறைவாகும். இந்தாண்டில் முதல் காலாண்டை ஒப்பிடுகையில் இதுவரை இரண்டாம் காலாண்டில் ஐபிஓகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. தொழில்துறை, மருத்துவத்துறை,தொழில்நுட்பத்துறை ஆகியவற்றில்தான் அதிக முதலீடுகள் கிடைத்துள்ளன. உலகளவில் பெரிய பாதிப்புகள் என எதுவும் இல்லாமல் இருப்பதும். கடன்கள் மீதான வட்டி விகிதங்கள் சீராக இருப்பதாலும் ஐபிஓகள் அதிகரித்துள்ளன.இந்தியா மட்டுமின்றி உலகளவிலும் ஐபிஓகள் மூலமாக நிதி திரட்டும் முயற்சிகள் அதிகரித்துள்ளன. உலகளவில் ஐபிஓகளின் எண்ணிக்கை இதுவரை கடந்தாண்டை ஒப்பிடுகையில் 5 விழுக்காடு குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.