பாவம் மஸ்குக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கனும்????
மோசமான ரிஸ்க் எடுப்பதில் உலகளவில் பிரபலமான ஒரு நபர் இருப்பார் என்றால் அது டெஸ்லா,டிவிட்டர் நிறுவனங்களின் முதலாளியான எலான் மஸ்காகத் தான் இருப்பார். இவரின் சொத்துமதிப்பு அண்மையில் 20 பில்லியன் அமெரிக்க டாலர் வீழ்ச்சி கண்டது. உலக பணக்காரர்கள் பட்டியலில் மிகவும் பிரபலமானர்களின் பட்டியல் அவர்களின் சொத்து மதிப்பு ஆராயப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக மஸ்கின் சொத்து மதிப்பு 234 பில்லியன் அமெரிக்க டாலர்களாக சரிந்துள்ளது. இது பழைய மதிப்பைவிட 20 பில்லியன் டாலர் குறைவாகும். LVMHநிறுவனத்தின் உரிமையாளரான பெர்னார்டு அர்னால்ட்டைவிட வெறும் 33பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டும்தான் மஸ்க் அதிகமாக இருக்கிறார்.எலான் மஸ்க் மட்டுமின்றி அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ், ஆரக்கிள் நிறுவனத்தின் முதலாளி லாரிஎலிசன், மார்க்ஜூக்கர்பர்க்,லாரி பேஜ், செர்ஜேய் பிரின் உள்ளிட்டோரின் சொத்துமதிப்புகளும் 20.8 பில்லியன் டாலர்கள் குறைந்துள்ளதாக தெரிவிக்கிறது புளூம்பர்க் நிறுவனம்.
இந்த வீழ்ச்சிக்கு மிகமுக்கியமான காரணமாக அமெரிக் பங்குச்சந்தையான நாஸ்டாக் 100 வீழ்ந்ததே காரணமாக கூறப்படுகிறது. 2.3% வீழ்ச்சி கண்டதே செல்வந்தர்களின் சொத்து மதிப்பு குறைய முக்கிய காரணாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். திடீரென பங்குச்சந்தைகள் சரிந்து விட்ட நிலையில் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பும் 9.7% சரிந்து 262.90அமெரிக்க டாலர்களாக நியூயார்க்கில் உள்ளது. இது கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் தேதிக்கு பிறகு மிகக்குறைவான தொகையாக இருக்கிறது.52 வயதாகும் எலான் மஸ்கின் சொத்துமதிப்பு இந்த ஓராண்டில் மட்டும் 118 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவருக்கு அடுத்த இடத்தில் அதாவது உலகளவில் சொத்துமதிப்பின் அடிப்படையில் 2ஆவது இடத்தில் பெர்னார்ட் அர்னால்ட் உள்ளார்.அவருக்கு வயது 74. அர்னால்ட்டின்சொத்து மதிப்பு மட்டும் இந்தாண்டு 39 விழுக்காடு அதிகரித்துள்ளது.