போச்சிடா சரிவுடன் தொடக்கம்..
இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் வணிகத்தை மேற்கொண்டன.உலகளவில் நிலவும் பங்குச்சந்தைகளின் தாக்கம் இந்திய சந்தைகளிலும் பிரதிபலித்தது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 299புள்ளிகள் சரிந்து 66ஆயிரத்து384 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 72 புள்ளிகள் சரிந்து 19 ஆயிரத்து 672 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. ஐடிசி நிறுவனத்தின் ஹோட்டல் துறை பங்குகளை தனியாக பிரிக்கபணிகளை ஐடிசி நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் அதன் தாக்கம் இந்திய சந்தைகளில் காணமுடிந்தது. உலோகங்கள், எண்ணெய் மற்றும் வாயுத்துறை பங்குகள் விற்பனை நடைபெற்றது.இண்டஸ் இன்ட் வங்கி பங்குகள் 2 விழுக்காடு அதிகரித்துள்ளது. எஸ்பிஐ,டாக்டர் ரெட்டீஸ் நிறுவனங்கள் லாபத்தை சந்தித்தன.4 விழுக்காடு வரை ஐடிசி நிறுவன பங்குகள் விலை சரிந்தன.Kotak Bank, Tech Mahindra,Reliance Industries ஆகிய நிறுவனபங்குகளும் சரிந்தன. தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் விலை குறைந்தது. ஒரு கிராம் தங்கம் 10 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 5ஆயிரத்து 545 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் 44 ஆயிரத்து 360 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலையில் மாற்றமின்றி 80 ரூபாய் 50 காசுகளாகவே விற்கப்படுகிறது. கட்டி வெள்ளி விலை கிலோ 80 ஆயிரத்து 500 ரூபாயாக இருக்கிறது. இந்த விலைகளுடன் 3 விழுக்காடு ஜிஎஸ்டி கட்டாயம் சேர்க்கவேண்டும், மேலும் செய்கூலி சேதாரம் சேர்ந்தால்தான் முழு பணம் தெரியவரும் ஆனால் செய்கூலி,சேதாரம் கடைக்கு கடை மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.