தாக்குப்பிடிக்க முடியாமல் சரிவு
வாரத்தின் கடைசி வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகள் குறிப்பிடத்தகுந்த சரிவை சந்தித்தன. தகவல் தொழில்நுட்பம்,வங்கி மற்றும் எண்ணெய் துறை பங்குகளை விற்பதிலேயே முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வந்ததால் பங்குச்சந்தைகளில் சரிவு காணப்பட்டது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 106 புள்ளிகள் சரிந்து 66ஆயிரத்து 160 புள்ளிகளாக சரிந்தது.தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 13 புள்ளிகள் குறைந்து 19646புள்ளிகள் வர்த்தகத்தை நிறைவு செய்தது. பெரிய சரிவு இருந்தபோதிலும் கடைசி நேரத்தில் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கியதால் நிலைமை ஓரளவுக்கு கட்டுப்பட்டது. Bajaj Finserv, HDFC Bank, BPCL, Tata Motorsஆகிய நிறுவன பங்குகள் பெரிய சரிவை சந்தித்தன. NTPC, Power Grid Corporation, Apollo Hospitals, Adani Enterprises ஆகிய நிறுவனங்கள் லாபத்தை பதிவு செய்தன. ஆற்றல் மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் 2 %வரை ஏற்றமடைந்தன. பங்குச்சந்தைகளைப் போலவே தங்கத்தின் விலையும் குறிப்படத்தகுந்த அளவுக்கு சரிந்தன.ஒரு கிராம் தங்கம் 30 ரூபாய் குறைந்து 5,550 ரூபாய்க்கு விற்பனையாகிறது.சவரனுக்கு தங்கம் 240 ரூபாய் குறைந்து 44ஆயிரத்து 400 ரூபாயாக இருந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரே நாளில் 2 ரூபாய் வீழ்ச்சியடைந்துள்ளது ஒரு கிராம் வெள்ளி 79 ரூபாய் 50 காசுகளாக உள்ளது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 2 ஆயிரம் ரூபாய் சரிந்து 79 ஆயிரத்து 500 ரூபாயாக உள்ளது. இந்த விலைகளுடன் 3 விழுக்காடு கட்டாய ஜிஎஸ்டி பொருந்தும். மேலும் செய்கூலி மற்றும் சேதாரம் சேர்த்தால்தான் முழு விலை கிடைக்கும். ஆனால் செய்கூலி சேதாரம் என்பது ஒரு கடைக்கும் இன்னொரு கடைக்கும் மாறுபடும் என்பதை கவனத்தில் வைத்து தங்கம்,வெள்ளியை வாங்கவேண்டும் என்பதை நினைவில் கொள்வது நலம்.