எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லையாம்..!!!!
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவராக முகேஷ் அம்பானி இருக்கிறார். முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் கடந்த 1994 ஆம் ஆண்டு பங்கு வாரண்டுகளை கடந்த 2000ஆம் ஆண்டு ஈக்விட்டி பங்குகளாக மாற்றியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த 2021ஆம் ஆண்டு ரிலையன்ஸ் குழுமத்தில் குறிப்பாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி,அனில் அம்பானி,நீடா அம்பானி உள்ளிட்ட அம்பானி குடும்பத்தினர் 15 பேருக்கு செபி 25 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. இதனை எதிர்த்து SATஎனப்படும் தீர்ப்பாயத்தில் அம்பானி குடும்பத்தினர் மேல்முறையீடு செய்தனர்.இதில் அண்மையில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அந்த தீர்ப்பில் அம்பானி குடும்பத்தினர் எந்த விதிகளையும் மீறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செபி விதித்த 25 கோடி ரூபாய் பணத்தை அம்பானிகுடும்பத்துக்கே அளிக்கவேண்டும் என்றும் SATஆணையிட்டுள்ளது. டேக்ஓவர் கோட் என்ற விகிதம் அந்த நேரத்தில் 5 விழுக்காடுக்கும் அதிகமாக இருந்த போது அம்பானி குடும்பத்தினர் உரிய விதிகளை பின்பற்றவில்லை என்பதே புகாராகும். பின்னாளில் டேக் ஓவர் கோட் என்ற விதி 10%ஆக திருத்தப்பட்டதையும் SAT அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் அம்பானி குடும்பத்தினருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளதால் அம்பானி குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர்.