சரிந்து விழுந்த சந்தைகள்…
இந்திய பங்குச்சந்தைகளில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி பெரிய சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 676 புள்ளிகள் சரிந்து 65782 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 207 புள்ளிகள் சரிந்து 19,526 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. தொடக்கத்தில் சரிந்த பங்குச்சந்தைகள் பின்னர் கடைசி நேரத்தில் சில பங்குகள் வாங்கப்பட்டதால் உயர்ந்து முடிந்தன. பொதுத்துறை வங்கிகள் ,ஆற்றல் துறை பங்குகள்,உலோகத்துறை பங்குகள் 2 விழுக்காடு விலை சரிந்தன.ஆட்டோமொபைல்,வங்கி,ரியல் எஸ்டேட் மற்றும் எண்ணெய் துறை பங்குகள் 1 விழுக்காடு வரை சரிந்தன.Hero MotoCorp, Tata Motors, Tata Steel, NTPC, Bajaj Finserv உள்ளிட்ட பங்குகள் பெரிதாக சரிந்தன.
Divis Labs, Nestle India, HUL, Tech Mahindra உள்ளிட்ட நிறுவன பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன.NBCC, Star Cement, Deep Industries, Parag Milk Foods, Lupin, Ramky Infrastructure, BEML, Elecon Engineering, RailTel Corporation of India, Ashoka Buildcon, Kolte-Patil Developers, Sansera Engineering, Satin Creditcare Network உள்ளிட்ட 200 நிறுவனங்களின் பங்குகள் 52 வாரங்களில் இல்லாத உச்சம் தொட்டன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் விலை குறைந்து 44,400ரூபாயாக விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் 20 ரூபாய் குறைந்து 5550ரூபாயாக இருக்கிறது. வெள்ளி விலை கிராமுக்கு 70காசுகள் குறைந்து 80 ரூபாய் 30 காசுகளாக உள்ளது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 700 ரூபாய் குறைந்து 80 ஆயிரத்து 300ரூபாய்க்கு விற்பனையானது. இந்த விலைகளுடன் கட்டாயம் 3 விழுக்காடு ஜிஎஸ்டி இருக்கும். மேலும் செய்கூலி,சேதாரம் இருக்கும் ஆனால் அந்த செய்கூலி சேதாரம் கடைக்கு கடை மாறுபடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவசர தேவைக்கு தங்கத்தை விட யாரும் சிறப்பான உதவி செய்துவிடமுடியாது.