கலாய்க்கப்படும் பிரபல நிறுவனம்!!!!
டைடானிக் படத்தையும்,அதில் நடித்த ஜாக் கதாப்பாத்திரத்தையும் அத்தனை எளிதில் யாரும் மறக்கமுடியாது. இந்த படத்தில் வரும் டைடானிக் கப்பல் தனது பயணித்தில் விபத்தில் சிக்கியது. இதில் நூற்றுக்கணக்கானோர் மாண்டு போயினர். இப்போது பிரச்சனை டைடானிக் கப்பல் இல்லை. டைடானிக் கப்பலை சுற்றிப்பார்க்க அழைத்துச்செல்கிறோம் என்று அமெரிக்க நிறுவனமான ஓசன் கேட்நிறுவனம் அண்மையில் டூர் அழைத்துச்சென்றனர். திடீரென டூர் சென்றவர்களின் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்துச்சிதறியது. இதில் பயணம் செய்த பிரபல கோடீஸ்வரர் உட்பட 5 பேர் உடல் எலும்பு கூட மிஞ்சவில்லை.இந்த நிலையில் ஓசன் கேட் நிறுவனம் வரும் 2050ஆம் ஆண்டில் ஆயிரம் மனிதர்களை வீனஸ் கிரிகத்துக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக ஓசன் கேட் நிறுவனத்தின் இணை நிறுவனரான Guillermo Sohnlein கூறியுள்ளார்.
ஹியூமன்ஸ் டு வீனஸ் என்று ஒரு நிறுவனத்தை ஆரம்பித்துள்ள அவர் மனித குலம் தங்கள் இலக்குகளை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். வெள்ளி கிரகத்தில் மனிதர்கள் வாழ சாத்தியம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பூமியில் இருப்பதைப்போலவே புவிஈர்ப்பு, தட்பவெட்பம்,தண்ணீர் , அழுத்தம் ஆகியவை இருக்கும் என்றும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் உறுதியாக நம்பி வருகிறார்.