அசுர வேகத்தில் வளரும் அம்பானி கம்பெனி..
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பல ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட ஒரு பெரிய நிறுவனமாகும். இந்த நிறுவனம் fortune global500 என்ற பட்டியலில் 16 இடங்கள் முன்னேறியுள்ளது. கடந்த முறை 104ஆவது இடத்தில் இருந்த இந்நிறுவனம் தற்போது 88ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 2021ஆம் ஆண்டு இந்த பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனம் 155ஆவது இடத்தில் இருந்தது. தற்போது 67 இடங்கள் முன்னேறி 88ஆவது இடத்துக்கு வந்துள்ளது. இந்த பட்டியலில் 48 இடங்கள் முன்னேறிய இந்தியன் ஆயில் நிறுவனம் 94ஆவது இடத்தில் உள்ளது. 9 இடங்கள் சரிந்த எல்ஐசி நிறுவனத்துக்கு 107 ஆவது இடம் கிடைத்திருக்கிறது.ONGCநிறுவனத்துக்கு 158 ஆவது இடமும்,பாரத் பெட்ரோலியம் 233ஆவது இடமும்,பாரத ஸ்டேட் வங்கிக்கு 235ஆவது இடமும் கிடைத்திருக்கிறது. இந்த பட்டியலில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 33 இடங்கள் முன்னேறி 337ஆவது இடத்தில் உள்ளது.ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம் 84இடங்கள் முன்னேறி 353ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. fortune global 500 பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்து 20 ஆண்டுகளாக இடம்பிடித்துள்ளது. இந்தியாவில் வேறு எந்த தனியார் நிறுவனங்களும் இத்தனை ஆண்டுகள் தொடர்ச்சியாக இடம்பெறவே இல்லை.2023நிதியாண்டில் மட்டும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருவாய் 9,76,524கோடி ரூபாயாக கிடைத்துள்ளது.இது கடந்தாண்டைவிட 23.2% அதிகமாகும்.o2c,சில்லறை மற்றும் டிஜிட்டல் சேவை வணிகம் ஆகிய துறைகளில் இதுவரை இல்லாத அதிகபட்ச வருவாயை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.