இனி போனில் டிவி பார்க்க இண்டர்நெட் தேவையில்லை..!!!
நம் வீடுகளில் DTH எனப்படும் குடை வைத்து படம் பார்க்கும் வசதி பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் உள்ளங்கையில் உலகம் வந்துவிட்டதால் செல்போன்களுக்கு மக்கள் மாறி வருகின்றனர்.இந்த நிலையில் இணைய வசதி இல்லாமல் ,நேரடியாக செல்போனிலேயே டிவி பார்க்கும் வசதிக்கான சாத்தியக்கூறுகளுக்காக மத்திய அரசு பணிகளை செய்து வருகிறது. DTMஅதாவது டைரக்டு டு மொபைல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்துக்கு ஐஐடி கான்பூருடன் மத்திய அரசு கைகோர்த்துள்ளது. இந்த புதிய நுட்பம் வந்தால் மக்கள் செல்போன்களுக்கு டேட்டாவை அதிகம் பயன்படுத்த மாட்டார்கள் என்பதால் சிம்கார்டு சேவை அளித்து வரும் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பை ஆரம்பத்திலேயே பதிவு செய்துவிட்டனர். தொலைதொடர்பு நிறுவனங்கள், பார்வையாளர்கள் மற்றும் அனைத்துத் தரப்பு கருத்துகளையும் கேட்டபிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த முக்கிய கூட்டம் அடுத்தவாரம் நடைபெற இருக்கிறது.ஒலிபரப்பு மற்றும் இணைய சேவையுடன் இணைந்து 5ஜி வடிவில் இந்த நுட்பத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 220 மில்லியன் மக்கள் மட்டுமே டிவி பார்க்கின்றனர். ஆனால் 800 மில்லியன் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் இருக்கின்றனர். 2026-இல் இந்த எண்ணிக்கை 100 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செல்போன்களுக்கு அளிக்கப்படும் உரிமம் போலவே, டைரக்ட் டு மொபைல் நுட்பத்தில் குறைவான மாத சந்தாவில் இந்த திட்டம் அமலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.