உலகம் முழுவதும் விலைவாசி பிரச்னைதான்…
கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவாக முதல் முறையாக உலகளவில் உணவுப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதாவது இந்தியாவில் உணவு ஏற்றுமதிக்குத் தடை, கருங்கடல் ஒப்பந்தம், அதீத காலநிலை மாற்றம் இவைதான் பிரதானமாக மாறியுள்ளன. ஜூலை மாதத்தில் ஐக்கிய நாடுகளின் உணவுப் பொருட்கள் விலைக்கான குறியீடு 1.3%அதிகரித்துள்ளது. ரஷ்யாவும் உக்ரைனும் சண்டையிடுவதால் கருங்கடல் ஒப்பந்தம் ரத்தானது. இவை அனைத்துக்கும் மேலாக இந்தியா பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளை ஏற்றுமதி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. சீனா மற்றும் தெற்கு ஐரோப்பிய நாடுகளை காலநிலை மாற்றம் பதம் பார்த்து வருகிறது.எகிப்து,பிரேசில்,கென்யாவில் உணவுப்பொருட்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. காய்கனி எண்ணெய் விலை 12 % வரை உயர்ந்திருக்கிறது. கருங்கடல் ஒப்பந்தத்தில் பெரிய பாதிப்பு சந்திக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் சில பகுதிகளில் பனை எண்ணெய் உற்பத்தியும் சரிந்துள்ளது.