லேப்டாப் விவகாரத்தில் அந்தர் பல்டி..!!
லேப்டாப் இறக்குமதி செய்ய பல்வேறு கட்டுப்பாடுகளையும் திடீர் தடையையும் அம்மையில் மத்திய அரசு விதித்தது. இந்த சூழலில் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை,திடீரென அந்த தடை வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலாகும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. வெளிநாட்டு வணிக பொது இயக்குநரகம் அண்மையில் லேப்டாப், கணினி ,டேப்லட் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய திடீர் தடை விதித்திருந்தது. இதனால் பெரிய பெரிய நிறுவனங்கள் அதிர்ச்சியில் உறைந்தன. இந்த சூழலில் திடீர் தடையை சற்று ஒத்திவைத்துள்ளது மத்திய அரசு.,அதாவது வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை பொருட்கள் தற்போது இருப்பதைப்போலவே இறக்குமதி செய்யலாம் என்றும் புதிய விதி நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெரிய நிறுவனங்கள் உரிய உரிமம் பெற்றுத்தான் லேப்டாப்களை இறக்குமதி செய்யவேண்டும் என்றும்,உள்நாட்டு டிஜிட்டல் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கிலும் லேப்டாப்களுக்கு அண்மையில் மத்திய அரசு தடை விதித்திருந்தது. இந்த சூழலில் ஆய்வு உள்ளிட்ட பணிகளுக்கு கணினிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. மேக் இன் இந்தியா திட்டத்தை வலுப்படுத்த இந்திய அரசு முயற்சிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்தியாவில் ஒரு காலாண்டுக்கு 20 லட்சம் லேப்டாப்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.உடனடியாக இந்தியாவில் அத்தனை பெரிய லேப்டாப் ஏற்றுமதி ஆலைகள் இல்லை என்பதால் ஏற்றுமதி-இறக்குமதி இடைவெளி என்பது மிகப்பெரிய அளவாக இருக்கிறது.