ரிசர்வ் வங்கி வரை விவாதிக்க வைக்கும் வெங்காயம்,தக்காளி விலை..
இந்தியாவில் விலைவாசி நிலவரத்தை கண்காணிப்பதில் ரிசரவ் வங்கிக்கு முக்கிய பங்கு உள்ளது. கடன்கள் மீதான வட்டி விகிதங்களை உயர்த்துவது குறித்து விவாதிக்க ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒரு முறை நிதி கொள்கை கூட்டத்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த முறை ஜூன் மாதத்தில் mpcஎனப்படும் நிதி கொள்கை கூட்டம் நடத்தப்பட்டது. வாடிக்கையாளர் சில்லறை விலைவாசியை கட்டுக்குள் வைக்க ரிசர்வ் வங்கி போராடி வருகிறது ஆனால் அண்மையில் விலை ஏறிய தக்காளி அதிகாரிகளை மலைக்க வைத்திருக்கிறது.வரும் கூட்டம் 8 முதல் 10ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த நிதி கொள்கை கூட்டத்தில் பிரதான பேசு பொருளாக வெங்காயமும் தக்காளியும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை மாத சில்லறை பணவீக்கம் என்பது 6.7 விழுக்காடு வரை இருக்கலாம் என்று ஏற்கனவே டாய்இச்ட் வங்கி கணித்திருந்தது. அண்மையில் தக்காளிவிலை வழக்கத்தைவிட் 5 மடங்கு வலையேறி இருந்ததை பார்க்க முடிகிறது.பூச்சி தாக்கம் மற்றும் சமமற்ற காலநிலை காரணமாக இந்த விலை தக்காளி விற்றதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் தற்போது படிப்படியாக சில இடங்களில் தக்காளி விலை குறைந்து வரும் நிலையில்,இது நிதி கொள்கை கூட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு குறைவு என்றும் மற்றொரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்
செப்டம்பர் பிற்பகுதியில் தக்காளி விலை கிலோ 60 முதல் 70 கிலோவாக உயரவும் வாய்ப்புள்ளதால் அது குறித்தும் விவாதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. பொதுத் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் சூழலில் பெட்ரோல்,டீசல் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ஏற்கனவே சமையல் எரிவாயு விலையும் கணிசமாக குறைய வாய்ப்பிருப்பதாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அடுத்து என்ன செய்யலாம் என்பதை நிர்ணயிப்பதில் வெங்காயம், தக்காளி மற்றும் உருளைக்கிழங்கின் பங்கு மிகமுக்கியமானதாக இருக்கிறது. இதை ரிசர்வ் வங்கி ஆளுநரும் கருத்தில் கொள்வார் என்கிறார்கள் நிபுணர்கள்.